ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

எந்திரன் பட பாணியில் எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய மனித உருவ ரோபோ; சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? 

எந்திரன் பட பாணியில் எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய மனித உருவ ரோபோ; சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? 

எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய மனித உருவ ரோபா

எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய மனித உருவ ரோபா

Tesla Elon Musk | டெஸ்லா நிறுவனம் இதுபோல் மில்லியன் கணக்கான மனித உருவ ரோபோக்களை உருவாக்கி 20 ஆயிரம் டாலருக்கும் குறைவாக விற்க திட்டமிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. புதுமை விரும்பியான எலான் மஸ்க், தனது பணத்தை டெஸ்லா மற்றும் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனங்களில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக முதலீடு செய்து வருகிறார்.

  அந்த வகையில் தற்போது மிகவும் அட்வான்ஸாக மனித உருவம் கொண்ட Super Humanoid Robot தயாரிப்பில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் களமிறங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ‘ஆப்டிமஸ்’ என பெயரிடப்பட்டுள்ள மனித உருவ ரோபோவின் மாதிரியை அறிமுகப்படுத்தினார்.

  இந்த ரோபோ எலான் மஸ்க் பேசிக்கொண்டிருந்த மேடையில் ஏறி அவரைப் பார்த்து கை அசைத்துவிட்டுச் சென்றது இணையத்தில் தாறுமாறு வைரலானது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மில்லியன் கணக்கான ஆப்டிமஸ் ரோபோக்களை உருவாக்கி, $20,000 டாலருக்கும் குறைவான தொகையில் டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  Read More : மைக்கிற்கு திடீரென ஆணுறை மாட்டிய பெண் நிருபர்... எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான் என விளக்கம்

  மனித உருவ ரோபோவான ஆப்டிமஸின் சிறப்பம்சங்கள் இதோ...

  • ஆப்டிமஸ் ரோபோ மேடையில் இருந்து மக்களை பார்த்து கையசைத்ததோடு, அது முழங்காலை அசைத்து நடனமாடியும் அசத்தியுள்ளது. இது எந்தவிதமான ரிமோட் கன்ட்ரோலும் இல்லாமல் நடந்துள்ளது.
  • டெஸ்லா நிறுவனம் இதுபோல் மில்லியன் கணக்கான மனித உருவ ரோபோக்களை உருவாக்கி 20 ஆயிரம் டாலருக்கும் குறைவாக விற்க திட்டமிட்டுள்ளது.
  • டெஸ்லா முதற்கட்டமாக ஆப்டிமஸை தொழிற்சாலைகளில் சோதிக்க உள்ளது. இந்த ரோபோக்களை கொண்டு உதிரிபாகங்களை எடுத்துச் செல்வது போன்ற எளிய பணிகளை செய்ய உள்ளது. அதன் பின்னர் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ரோபோக்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
  • ஆப்டிமஸ் ரோபோவை மேம்படுத்தவும், அதனால் என்னென்ன மாதிரியான பணிகளை செய்ய முடியும் என்பதை சோதனைகள் வழியாக நிரூபிக்கவும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்த எலான் மஸ்க், இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் ஆப்டிமஸ் ரோபோ பயன்பாடு நம்ப முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
  • பிரபல மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லா மட்டுமே இதுபோன்ற மனித உருவ ரோபோவை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள கார் தயாரிப்பு நிறுவனம் கிடையாது. டொயோட்டா மோட்டார் மற்றும் ஹோண்டா மோட்டார் ஆகியவையும் மனித உருவ ரோபோ முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளன. ஆனால் முதன் முறையாக டெஸ்லா மட்டுமே தொழிற்சாலை பணிகளில் ஈடுபடுத்தக்கூடிய வகையிலான மனித உருவ ரோப்போக்களை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

  • டெஸ்லா கார்களைப் போலவே ஆப்டிமஸ் ரோபோவிலும் 2.3-kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும். சிப் அமைப்பு மற்றும் அதன் மூட்டுகளை இயக்க ஆக்சுவேட்டர்கள் ஆகியவை இடம் பெறும்.
  • மனித வடிவிலான ஆப்டிமஸ் ரோபோ 73 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்திருந்த எலான் மஸ்க், தற்போது ரோப்போக்களை தொழிற்சாலைகளில் வேலை செய்ய வைப்பதன் மூலமாக அதனை சமூகத்திற்கு பாதுகாப்பானதாக மாற்ற நினைப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் டெர்மினேட்டர் போன்ற ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவது போல் ரோபோக்கள் திடீரென மனிதர்களுக்கு எதிராக மாறுவதை தடுக்க பிரத்யேகமாக ஸ்டாப் பட்டனும் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Elon Musk, Robo, Trending, Viral