ஓடும் ரயிலில் உயிரைப் பணயம் வைத்த இளைஞர்... எச்சரித்த இந்திய ரயில்வே - வீடியோ

ஓடும் ரயிலில் உயிரைப் பணயம் வைத்த இளைஞர்... எச்சரித்த இந்திய ரயில்வே - வீடியோ
ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்
  • Share this:
இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.  7 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோவை இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்து தண்டவாளத்தில் குதித்து விட்டார். ரயில் சக்கரத்தில் அவரது கால்கள் மாட்டிக்கொண்ட போதும் எவ்வித காயங்கள் இன்றி உயிர் தப்பி விட்டார். இதனை பார்த்த ரயில் பயணிகள் இளைஞரின் செயலை கண்டு கூச்சலிடுகின்றனர்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே, நகரும் ரயிலில் இருந்து இறங்குவது - ஏறுவது ஆபத்தானது. ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் இருக்காது. நொடி பொழுதில் உயிரைஇழக்க நேர்ந்திருப்பார்.


தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள். மற்றவர்களும் இதைச் செய்ய விடாதீர்கள், வாழ்க்கை விலைமதிப்பற்றது. ரயில் சக்கரத்தில் உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞரின் இந்த செயலுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

चलती हुई ट्रेन से उतरना- चढ़ना जानलेवा है, इन्हें देखिए स्टंट के चक्कर में अपनी जान से हाथ धो बैठते लेकिन हर बार किस्मत इनके साथ नहीं होगी।


First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading