தம்பி ஓரம்போ... பொறுமை காக்காத டூ வீலருக்கு மிரட்டல் விடுத்த காட்டு யானை - வீடியோ

தம்பி ஓரம்போ... பொறுமை காக்காத டூ வீலருக்கு மிரட்டல் விடுத்த காட்டு யானை - வீடியோ
தம்பி ஓரம்போ...டூ வீலருக்கு மிரட்டல் விடுத்த காட்டு யானை
  • Share this:
நெடுஞ்சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு யானை ஒன்று மிரட்டல் விடுத்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர்நாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் விலங்கினங்கள் தொடர்பான வீடியோக்களை தினமும் ட்விட்டரில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்விதம் யானை ஒன்று நெடுஞ்சாலையில் வரும் இரு சக்கர வாகனஓட்டியை மிரட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் யானை ஒன்று தனது வழித்தடத்தை கடப்பது போல் சாலையை கடந்து நேராக அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் செல்கின்றது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர் காட்டு விலங்குகளின் வாழ்க்கையில் மிக கடினமான பகுதி மனிதர்களை சமாளிப்பது தான்.


யானை சாலையை கடப்பது தெரிந்தும் இவ்விதம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்கிறார். பிற மனிதர்கள் அவர் பின்னால் யானை செல்லட்டும் என நிற்கின்றனர். நொடி பொழுதில் என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

 

First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்