ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திறந்த விமானத்தின் கதவு..! அச்சத்தில் உறைந்த பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ..!

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திறந்த விமானத்தின் கதவு..! அச்சத்தில் உறைந்த பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குறிப்பிட்ட விமானத்தில் சம்பவத்தின் போது இருந்த பயணிகளில் ஒருவர் இந்த திகிலூட்டும் தருணத்தை வீடியோவாக ரெக்கார்ட் செய்து ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் விமானத்தின் பின்புற கதவு திறந்திருப்பதை பார்க்க முடிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விமான பயணத்தின் போது பலவித அசம்பாவித சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு வினோதமான சம்பவத்தில், ரஷ்ய விமானம் ஒன்றின் கதவு நடுவானில் திறந்து கொண்டது. இது தொடர்பான பயங்கர வீடியோவும் வெளியாகியுள்ளது. விமானம் 2800-2900 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

இதனால் அதில் பயணித்த விமான பயணிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். மேலும் இது தொடர்பான பயணி ஒருவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பிட்ட சிறிய ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் பின்புற கதவு திடீரென திறந்ததால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ, எங்கே காற்றால் உறிஞ்சப்பட்டு விமானத்தை விட்டு வெளியே விழுந்து விடுவோமோ என கதிகலங்கிய பயணிகள் பீதியில் உறைந்து போயினர். இந்த விமானம் புறப்பட்டபோது கடும் குளிர் நிலவியது.

சைபீரிய நகரான Magan-ல் இருந்து மைனஸ் 41 டிகிரி வெப்பநிலை நிலவிய போது இந்த ரஷ்ய விமானம் புறப்பட்டு, ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் உள்ள Magadan பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. நியூயோர்க் போஸ்ட் படி வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த சம்பவம் IrAero-க்கு சொந்தமான An-26 ட்வின் ப்ராப் (An-26 twin prop) விமானத்தில் நடந்துள்ளது. இந்த விமானம் நடுவானில் பயணித்து கொண்டிருந்தபோது பணியாட்கள் உட்பட மொத்தம் 25 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.

குறிப்பிட்ட விமானத்தில் நிகழ்வின்போது இருந்த பயணிகளில் ஒருவர் இந்த திகிலூட்டும் தருணத்தை வீடியோவாக ரெக்கார்ட் செய்து ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் விமானத்தின் பின்புற கதவு திறந்திருப்பதை பார்க்க முடிகிறது. விமானம் பறக்கும் போது லக்கேஜ்களை மறைக்க பயன்படுத்தப்படும் கர்ட்டெயின் எப்படி காற்றில் மிக பயங்கரமாக படபடக்கிறது என்பதையும் வீடியோ காட்டுகிறது. எனினும் இச்சம்பவத்தின் போது நடுவானில் நிலவிய கடும் குளிரிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள கோட்களை பயன்படுத்தினர்.

நடுவானில் திறந்த விமானத்தின் பின்பக்க கதவு லக்கேஜ்களை ஏற்ற மற்றும் இறக்க பயன்படுத்தப்படுவது ஆகும். இந்த கதவு திறந்தவுடன் அதிவேக காற்றின் காரணமாக விமானத்தின் உள்ளே போட்டிருந்த திரைச்சீலைகள் பறக்க தொடங்கியதுடன் விமானத்தின் உள்ளே வெப்பநிலை வெகுவாக குறைந்தது.

திடீரென நடுவானில் விமானத்தின் பின்பக்க கதவு திறந்து பயங்கர குளிர்காற்று உள்ளே வீசி அதகளம் செய்ய துவங்கியதும் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் கூச்சலிட்டனர். சம்பவத்தை தொடர்ந்து பைலட் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்கும் முயற்சியை மேற்கொண்டார். சில நிமிடங்கள் வானில் வட்டமடித்த பிறகு பின்பக்க கதவு பாதியில் திறந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்தே விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் மற்ற உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனிடையே இந்த சம்பவத்தின் வீடியோவை உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோவும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் லக்கேஜ் பாதையின் லாக்கிங் மெக்கானிஸத்தில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

First published:

Tags: Trending, Viral