• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வாயில் 555 பற்கள், கத்தியை விட கூர்மையானது; உலகின் ஆபத்தான மீன்

வாயில் 555 பற்கள், கத்தியை விட கூர்மையானது; உலகின் ஆபத்தான மீன்

வாயில் 555 பற்கள், கத்தியை விட கூர்மையானது; உலகின் ஆபத்தான மீன்

வாயில் 555 பற்கள், கத்தியை விட கூர்மையானது; உலகின் ஆபத்தான மீன்

இந்த மீன் பெரியதாக இருக்கும் போது அதன் பற்கள் 50 செ.மீ முதல் ஒன்றரை மீட்டர் வரை இருக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உலகின் பல வகையான உயிரினங்கள் உள்ளன. நிலமாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி உயிரினங்களின் எண்ணிக்கையை கணக்கிடவே முடியாது. ஒவ்வொரு நாளும் விசித்திரமான உயிரினம் குறித்து நாம் தெரிந்து கொண்டு தான் வருகிறோம். தற்போது விநோதமான மீன் ஒன்று நமது பார்வைக்கு வந்துள்ளது. அதன் பற்கள் தான் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மீனின் பெயர் பசிபிக் லிங்கோட். இந்த மீன் வடக்கு பசிபிக் பகுதியில் காணப்படுகிறது. இந்த மீனின் வாயில் 555 பற்கள் உள்ளன. இந்த வகை மீன் பற்களின் விளிம்பு கத்தியை விட கூர்மையானது. இந்த மீனின் வாயில் விரல் போனால் தப்பிப்பது கடினம். உலகின் ஆபத்தான மீன்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

    அகன்ற வாயை கொண்ட இந்த மீனின் வாயில் சுமார் 555 பற்கள் உள்ளன. விஞ்ஞானிகள் கூற்றுகள்படி, இந்த மீனின் வாயிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் இருபது பற்கள் விழும். பற்களைப் பார்த்தாலே பயப்பட கூடிய நிலை தான் இருக்கும். இந்த மீனின் வாயிலிருந்து தினமும் சுமார் இருபது பற்கள் உடைந்து போவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்த மீன் பெரியதாக இருக்கும் போது அதன் பற்கள் 50 செ.மீ முதல் ஒன்றரை மீட்டர் வரை இருக்கும். இந்த மீனின் பற்கள் மனிதர்களை போல் இல்லை. ஆனால் அவை மிகவும் கூர்மையானது. இதன் வாயில் இரண்டு செட் பற்கள் உள்ளன. விஞ்ஞானிகள் இந்த மீனின் பற்களுக்காகவே ஆய்வு செய்கிறார்கள்.



    வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வகம் சுமார் 20 மீன்களை ஆய்வுக்காக பிடித்துள்ளது. அவற்றின் பார்கள் மிகவும் சிறியவை. அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது. இந்த மீன்களில் பற்களை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் தொட்டியில் சிவப்பு சாயத்தை கலக்கினர். அதன்பின் மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்த போது பற்கள் தெரிந்தன. இந்த 20 மீன்கள் வைக்கப்பட்டிருந்த தொட்டியில் இருந்து சில நாட்களுக்குப் பிறகு, அவற்றை அகற்றியபோது, ​​தொட்டியில் இருந்து சுமார் 10 ஆயிரம் பற்கள் அகற்றப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: