சிகரெட் புகையில் குழந்தையை சுழற்றி விளையாடிய தாய்.. வைரல் வீடியோவால் கைது..!

அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகும் பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சிகரெட் புகையில் குழந்தையை சுழற்றி விளையாடிய தாய்.. வைரல் வீடியோவால் கைது..!
கையில் குழந்தையை சுழற்றி விளையாடும் தாய்
  • News18
  • Last Updated: October 3, 2019, 6:43 PM IST
  • Share this:
அமெரிக்காவின் டென்னிஸியில் , பெண் ஒருவர்  பெற்ற குழந்தையை ஒரு கையில் தூக்கிக் கொண்டே மறுகையில் சிகரெட் பிடித்து புகையை குழந்தை மேல் விடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

டைப்ரஷா செஸ்டோன் என்ற 24 வயது பெண் அந்த வீடியோவை லைவாகக் காண்பித்ததுதான் இன்னும் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

அதாவது அந்த வீடியோவில் ஒரு கையில் குழந்தையை லிஃப்டிங் செய்வது போல் ஏற்றியும் இறக்கியும் சுழற்றுகிறார். மறுகையில் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே அந்தப் புகையை குழந்தை மேல் விடுகிறார். அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தக் கொடூர வீடியோவைக் கண்ட சில இணையவாசிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணை அணுகி காரணம் கேட்ட போது ”அந்தக் குழந்தையே எனக்கு வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது அறையில் நிறைய மது பாட்டில்கள் இருந்துள்ளது என நியூயார்க் போஸ்ட் அளித்துள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தையை ஒற்றைக் கையில் தூக்கியது மட்டுமன்றி சுழற்றுவதும், குலுக்குவதுமாக செய்திருக்கிறார். அதைக் லைவில் கண்ட பலரும் நிறுத்துங்கள் என கமெண்டில் குறிப்பிட்டுள்ளர்.

தற்போது அந்த பெண்ணை குற்றவியல் வழக்கில் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்