‘திருமணம் ஆயிரம் காலத்து பயிர்’ என்பார்கள் ஆனால் தற்போதைய ஆன்லைன் யுகத்தில் எல்லா விஷயத்திலும் நிரம்பி வழியும் பொய்களால் திருமண பந்தத்தின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. திருமணமாகி சில ஆண்டுகள் வாழ்ந்து, அந்த வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் தம்பதிகளை பார்த்திருப்போம். ஆனால் இங்கு திருமணமாகி 10 மாதங்கள் காதல் கணவருடன் குடும்பம் நடத்திய பெண் ஒருவர், எனது கணவர் ஆணே கிடையாது ஒரு பெண் என பகிர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தோனேசிய பெண் ஒருவரது இந்த துரதிர்ஷ்டவசமான திருமணக் வாழ்க்கை இணையத்தில் வைரலாகி பேரதிர்ச்சியை கிளப்பி வருகிறது. இந்தோனோஷியா நாட்டின் ஜாம்போ பகுதியைச் சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர், திருமணமான பத்து மாதங்களில் தனது கணவர் ஒரு பெண் என்று கண்டுபிடிதுள்ளதாகவும், அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
இளம் பெண் சோசியல் மீடியாவிற்கு அடிமையாக இருந்துள்ளார். எனவே டேட்டிங் ஆப் மூலமாக தனது காதலரை சந்தித்துள்ளார். அந்த நபர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை விரைவில் அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் 2021ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.
AA என்ற அந்த நபர், அறுவை சிகிச்சை நிபுணர் மட்டுமின்றி, தான் பெரிய நிலக்கரி வியாபாரம் செய்யும் பிசினஸ் மேன் என்றும் அப்பெண்ணை நம்பவைத்துள்ளார். இதனையடுத்து இருவரும் தங்களது வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். குடும்பத்தினருக்கு தெரியாமல் அப்பெண் அந்த நபருடன் ரகசியமாக புதிய வீட்டில் குடும்பம் நடத்தவும் ஆரம்பித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் உள்ள தெற்கு சுமத்ரா பகுதியில் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், தனது வீட்டாரிடம் சென்று பணம் வாங்கி வரும் படி துன்புறுத்த ஆரம்பித்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். தொழில் செய்வதற்காக பணம் தேவை என அந்த பெண்ணை வற்புறுத்தி, மொத்தம் 16,537 பவுண்டுகள், இந்திய மதிப்பில் 15.7 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார்.
மேலும் திருமணத்தை பதிவு செய்வதற்கான எந்த ஆவணங்களையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்தோனேசியாவில் பதிவு செய்யப்படாத திருமணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 'ரகசியத் திருமணம்’ என்ற விஷயத்தை பயன்படுத்தி அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினரை பார்க்க கூடாது என்றும் அப்பெண்ணை அந்த நபர் தொடர்ந்து தனிமைப்படுத்தி வந்துள்ளார்.
Also see... மெட்ரோ ரயிலில் குழந்தையுடன் தரையில் அமர்ந்திருந்த பெண்: கண்டுகொள்ளாத சக பயணிகள்- வைரல் வீடியோ
தனது மகளை காணாமல் தவித்த பெற்றோர், அவர் திருமணம் செய்து கொண்ட நபர் மீது எழுந்த சந்தேகம் காரணமாக இந்தோனேஷியாவில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ஜாம்பி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 10 மாதங்களாக கணவனாக கருதப்பட்டு, அப்பெண் குடும்பம் நடத்தி வருவது ஒரு ஆண் அல்ல, அவர் உண்மையில் ஒரு பெண் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
போலியான சான்றிதழ்கள் மற்றும் டேட்டிங் ஆப் புரோஃப்லை வைத்து அப்பெண்ணை தனது வலையில் சிக்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த புதுவிதமான மோசடி இணையத்தில் கசிந்ததை அடுத்து, இந்தோனேஷியாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending News, Viral, Viral News