Home /News /trend /

ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்த இளைஞர்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்

ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்த இளைஞர்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்

தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்காக ரயில்கள் செல்லும் தண்டவாளத்தை தேர்வு செய்த இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India
    தெலுங்கானாவில் ரயில் வந்து கொண்டிருந்த போது ரயில் பாதையில் இன்ஸ்டாகிராம் ரீல் செய்ய முயன்ற இளைஞர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள காசிபேட் ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. 17 வயது இளைஞன் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக முயன்றுள்ளார். அதில் பின்னே ரயில் வருவது போலவும் , சோகமாக நடந்து வருவது போலவும் ரீல்ஸ் செய்து பதிவிட எண்ணியுள்ளார்.

    அதற்காக தண்டவாளத்தில் ரயில் வரும் நேரத்தில் சோகமாக நடந்து வரும் போது ரயில் செல்லும் வேகத்தில் மாணவன் மீது மோதிவிட்டு சென்றது. இந்த ரீல்ஸை படம் பிடித்து கொண்டிருந்த மாணவனின் நண்பன் ரயில் அருகில் வருகின்றது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.எனினும் கண் இமைக்கும் நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பின்னர் ரயில்வே காவலர் ஒருவர் ஆம்புலன்சை அழைத்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

     



     

    எனினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் இது போன்று விபரீத முயற்சியை யாரும் செய்யாதீர்கள் என ஷேர் செய்து வருகின்றனர்.இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இந்திய வனத்துறை அதிகாரியான டிபன்ஷு கப்ரா, உங்கள் வாழ்க்கை உங்கள் லைக்ஸை விட முக்கியத்துவம் வாய்ந்தது. என பதிவிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Telangana, Trending, Viral Video

    அடுத்த செய்தி