Home /News /trend /

கெத்தாக இன்ஸ்டா ரீலில் வர வேண்டும் என்று நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் - வைரலாகும் விபரீத வீடியோ.!

கெத்தாக இன்ஸ்டா ரீலில் வர வேண்டும் என்று நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் - வைரலாகும் விபரீத வீடியோ.!

இன்ஸ்டா ரீல்

இன்ஸ்டா ரீல்

Viral Video | சாகச இன்ஸ்டா ரீல் உருவாக்க வேண்டும் என்ற ஒரு சிறுவனின் மோகம் அவனை படுகாயத்துடன் மருத்துவமனையில் படுக்க வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Telangana, India
சோஷியல் மீடியா மீதான மோகம் அதிகரித்து பல ஆண்டுகள் ஆகிறது. நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை அள்ள வேண்டும், இதன் மூலம் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஸ்க்கான செயல்களில் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் பலர்.

எனினும் கூட சோஷியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் தாங்கள் செய்யும் மோசமான மற்றும் ஆபத்தான விஷயங்களை நிறுத்தி கொள்வதாக தெரியவில்லை. தற்போது இன்ஸ்டா ரீல் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சாகச இன்ஸ்டா ரீல் உருவாக்க வேண்டும் என்ற ஒரு சிறுவனின் மோகம் அவனை படுகாயத்துடன் மருத்துவமனையில் படுக்க வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள காசிபேட் ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓடும் ரயிலை பின்னணியாக கொண்டு சாகச இன்ஸ்டா ரீலில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பொறியியல் படிக்கும் 17 வயது மாணவன். இதன் பொருட்டு ரயில் எஞ்சின் வரும் போது அதன் பக்கவாட்டில் மிக அருகில் நடந்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த மாணவன் அதனை வீடியோவாக ரெக்கார்ட் செய்ய அவனது நண்பர்களுடன் ரயில்வே டிராக் அருகே ரெடியாக காத்திருந்தான்.

Also Read : ஆண்கள் அனுபவித்த பிரீயட்ஸ் வலி.. அலறியடித்து ஓடிய இன்ஸ்டா பிரபலம்.. வைரலாகும் வீடியோ

தூரத்தில் ரயில் வருவதை கண்ட பொறியியல் மாணவன் அவனது நண்பர்களை வீடியோ எடுக்க சொல்லி விட்டு ரயில் வரும் திசையில் தண்டவாளத்திற்கு மிக அருகில் ஸ்டைலாக நடக்க துவங்கினான். ரயில் சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், மாணவனின் அருகில் ரயில் வந்ததும் வீடியோ எடுத்து கொண்டிருந்த நண்பன் ரயில் மிக அருகில் வந்து விட்டது என்று எச்சரிக்கை குரல் எழுப்பினான். உடனே வேறு ஒரு ஸ்டைலுக்கு தயாரான அந்த கல்லூரி மாணவனின் இடது பின்பக்கத்தில் வேகமாக வந்த ரயில் பயங்கரமாக இடித்ததில் எகிறி பக்கவாட்டில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்தான் சாகச இன்ஸ்டா ரீலில் இடம்பெற ஆசைப்பட்ட அந்த டீனேஜர். 
View this post on Instagram

 

A post shared by News18.com (@cnnnews18)


ரயில் இடித்து படுகாயமடைந்த இந்த பொறியியல் மாணவனின் பெயர் சிந்தகுலா அக்‌ஷய் ராஜு என்பதும், இவர் வாரங்கலை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த ரயில்வே காவலர் அஜய், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவன் அக்‌ஷையை, ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளார். தற்போது வாரங்களில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அக்‌ஷய் ராஜு, அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ரயில் வரும் பின்னணியில் கெத்தாக நடந்து சென்று வைரலாக வேண்டும் என்று நினைத்த அக்‌ஷய் ராஜுவை, ரயில் இடித்து தள்ளும் சம்பவம் அடங்கிய 10 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தாவது உயிரின் மதிப்பு தெரியாமல் இது போன்ற அபாயகரமான யோசனைகளுடன் ரிஸ்க் எடுக்கும் இளம் வயதினர் திருந்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Telangana, Trending, Viral Video

அடுத்த செய்தி