மருத்துவமனை முன் பிச்சை எடுத்த சிறுவன் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் - உடனடியாக உதவிய அமைச்சர்!

சிறுவனுக்கு உதவிய அமைச்சர்

யாருடைய ஆதரவும் இல்லாத ஒரு சிறுவன் மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும் வேதனை சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் ஷேர் செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் தொற்று பாதிப்பிற்குள்ளான பலர் சரியான மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்துள்ள சம்பவங்களும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அபாயகரமான இந்த கொடிய தொற்றுக்கு எதிரான போரில் பலர் பலியாகியுள்ள நிலையில், அவர்களின் குழந்தைகள் ஆதரவு யாருமற்ற அனாதைகளாக மாறியுள்ளனர். அதே நேரத்தில் தீவிர தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சை பெறுவதால் கைவிடப்பட்ட சில குழந்தைகள் அடிப்படை வசதிகள் கூட இன்றி அவதிப்படும் சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இது போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்று ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முன்னால் நடந்துள்ளது. யாருடைய ஆதரவும் இல்லாத ஒரு சிறுவன் மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும் வேதனை சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் ஷேர் செய்யப்பட்டது. பலரின் கண்களை கலங்க செய்த புகைப்படங்களை கண்ட தெலுங்கானாவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், உதவிக்கு யாருமின்றி வறுமை காரணமாக பிச்சை எடுத்த சிறுவனுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Also read... தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஷெரீன் - என்ன ஆச்சு தெரியுமா?

சிறுவன் கஷ்டப்படும் சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட நபரின் பெயர் ராபின். இவர் காந்தி ஹாஸ்பிடலுக்கு வெளியே தாயின் உடல்நிலை சரியில்லாததால் பிச்சை எடுத்து கொண்டிருந்த சிறுவனை பார்த்துள்ளார். சரி யாருமில்லாமல் கஷ்டப்படுகிறானே என்றெண்ணி ஏதாவது ஹாஸ்டலில் உன்னை சேர்த்துவிட்டால் உனக்கு ஓகேவா அங்கிருந்து கொள்வாயா என்று கேட்டுள்ளார். ஹாஸ்டலில் சேர விருப்பம் இருக்கிறது என்ற பாசிட்டிவான பதிலை சிறுவனிடம் பெற்ற பிறகு, அவனுக்கு உதவ சிறுவனின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் போட்டோவுடன் பதிவிட்டார். அந்த பதிவில் அமைச்சர் ராவ் உட்பட பல செல்வாக்கான நபர்களை tag செய்தார். சிறுவனின் எதிர்காலத்தை காப்பாற்ற உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.


தான் tag செய்யப்பட்ட இந்த ட்விட்டிற்கு நாங்கள் கவனிக்கிறோம், எங்கள் குழுவுடன் ஒருங்கிணைந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் பதில் அளித்தார். இந்நிலையில் சிறுவனுக்கு உதவ முயற்சியை முன்னெடுத்த ராபி தனது சமீபத்திய ட்வீட்டுகளில், அமைச்சரின் குழு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிறுவனை அழைத்து செல்ல ஒரு அதிகாரி ஏற்கனவே வந்துவிட்டதையும் அவர் வெளிப்படுத்தினார்.அதிகாரிகள் குழு மற்றும் அமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள ராபின், அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் நடவடிக்கை மூலம் சிறுவனின் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிச்சை எடுக்கும் சிறுவனை பார்த்ததும் அமைதியாக கடந்து சென்று விடாமல், அவனுக்கு உதவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக நெட்டிசன்கள் ராபினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: