Home /News /trend /

மின்சாரம் இல்லாமல் இயங்கும் புதுமையான ட்ரெட்மில்.! தெலுங்கானா நபர் அசத்தல்

மின்சாரம் இல்லாமல் இயங்கும் புதுமையான ட்ரெட்மில்.! தெலுங்கானா நபர் அசத்தல்

Wooden Treadmill

Wooden Treadmill

Wooden Treadmill | புதுமை என்பது நவீன உலகின் முக்கிய வார்த்தையாக உள்ளது. இந்தியர்கள் எப்போதும் புதுமையான விஷயங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள். தெலுங்கானாவை சேர்ந்த குறிப்பிட்ட நபர் மின்சாரம் இல்லாமல் இயங்கும் மரத்தினால் செய்யப்பட்ட ட்ரெட்மில் ( wooden treadmill) ஒன்றை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
ட்ரெட்மில் என்பது பரவலாக பயன்படுத்தப்படும் உடற்பயிற்சி உபகரணம் ஆகும். இவை பொதுவாக ஜிம்களிலும் சற்று வசதி படைத்தவர்களின் வீடுகளிலும் காணப்படுகின்றன. ஏனெனில் டிரெட்மில் மொபைல் போன்று மலிவு விலையில் கிடைப்பதில்லை. நல்ல தரமான மற்றும் திறனுள்ள ட்ரெட்மில் வாங்க வேண்டும் என்றால் அதிகம் செலவழிக்க வேண்டும்.

இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் வழக்கமான எடை அதிகம் கொண்ட ட்ரெட்மில்லுக்கு பதில் எடை குறைவான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நியாயமான விலை கொண்ட ட்ரெட்மில் ஒன்றை உருவாக்கி அசத்தி உள்ளார். தெலுங்கானாவை சேர்ந்த குறிப்பிட்ட நபர் மின்சாரம் இல்லாமல் இயங்கும் மரத்தினால் செய்யப்பட்ட ட்ரெட்மில் ( wooden treadmill) ஒன்றை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி இருக்கிறது.

ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்ட 45 வினாடி வீடியோ கிளிப்பில், ஒரு நபர் மர ட்ரெட்மில்லை உருவாக்குவது, அது சரியாக இயங்க வீல்ஸ்களை பயன்படுத்துவது உள்ளிட்ட காட்சிகள் அடங்கி உள்ளன. பின் இறுதியாக அவர் தனது படைப்பை சோதித்து பார்க்க மர ட்ரெட்மில்லில் நடக்கிறார். குறிப்பிட்ட வீடியோவில் அந்த மனிதர் உருவாக்கி இருக்கும் மர ட்ரெட்மில் மிக ஸ்மூத்தாக வேலை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவில் ட்ரெட்மில்லை அவர் கட்டமைப்பதை காணவே அற்புதமாக இருக்கிறது. வீடியோவின் முதல் பாதியில் ட்ரெட்மில்லை உருவாக்க மரப் பொருட்களை நேர்த்தியாக அசெம்பிள் செய்து, பாகங்களை நன்கு டைட் செய்வதை பார்க்க முடிகிறது.



கரன்ட் இல்லாமல் செயல்படும் அற்புத ட்ரெட்மில்லை உருவாக்கி இருக்கும் அந்த நபரின் திறமையை பார்த்து வியந்து வரும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸில் அவரை பாராட்டி தள்ளுகின்றனர். இந்த புதிய கண்டுபிடிப்பு தெலுங்கானா மாநில தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் கவனத்தையும் ஈர்த்தது. அந்த நபரின் படைப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட கே.டி.ஆர் அந்த வீடியோவை ரீட்வீட் செய்து, அவரை கண்டறிந்து திறமையை மேலும் ஊக்கப்படுத்த உதவுங்கள் என்று மாநிலத்தின் முன்மாதிரி மையமான T-Works-ஐ டேக் செய்துள்ளார்.



இந்த வீடியோவை முதலில் ட்விட்டர் யூஸரான அருண் பகவத்துலா எனபவர் "பவர் இல்லாமல் செயல்படும் அற்புதமான ட்ரெட்மில்" என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்து உள்ளார். இதுவரை சுமார் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 7,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்து உள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Telangana, Treadmill, Trending

அடுத்த செய்தி