இணையத்தில் வைரலாக கூடிய சில வீடியோக்கள் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடிக்க கூடியதாக இருக்கும். அந்த வகையில், மற்றவர்களின் உயிரை காப்பற்றவது, பிறருக்கு உதவி செய்வது, வாழ்க்கைக்கான உதாரணங்கள் கொண்ட வீடியோ போன்றவை எளிதில் வைரலாகி விடும். இதற்கு முக்கிய காரணம் மனிதாபிமானம் தான். அதிலும் பலர் தனக்கு சிறிதும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உதவும் வீடியோக்கள் பல வைரலாக வாய்ப்பு அதிகம். இதே போன்ற ஒரு நிகழ்வு தான் தெலங்கானாவில் நடந்துள்ளது.
இதில் தனது உயிரையே பணயம் வைத்து ஒரு நாயை காப்பாற்றி உள்ளார் ஒருவர். இவர் நாயை காப்பாற்றும் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டதையடுத்து அவர் ஹீரோவாகவும் புகழப்பட்டு வருகிறார். இந்த வீடியோவில் அதிக வெள்ளத்தை கூட பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்ற அவர் தனது உயிரைப் பணயம் வைப்பதை மிகவும் பயம்கொள்ளும் உணர்வுடன் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை யார் பார்த்தாலும் இவரின் நல்ல மனதை நிச்சயம் பாராட்ட தோன்றும்.
இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான திபன்சு கப்ரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முஜீப் என்ற துணிச்சலான வீட்டுக் காவலர் செய்த உதவியை விளக்கி இந்தியில் ஒரு தலைப்பை எழுதி பகிர்ந்துள்ளார். "வெள்ளம் நிறைந்த ஓடையில் நாய் சிக்கியதை காவலர் கவனித்துள்ளார். உடனே, அப்பாவி நாயிற்கு உதவ அவர் முன்வந்தார்" என்று ஐபிஎஸ் அதிகாரி விளக்கி உள்ளார். இவரின் சிறந்த உதவியை பாராட்டும் விதமாக இதை தனது ட்விட்டர் பக்கத்தில் திபன்சு பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
तेज़ लहरों के बीच फंसे कुत्ते को देखकर @TelanganaCOPs के होम गार्ड मुजीब ने तुरंत JCB बुलाई और खुद उसे बचाने के लिए लहरों में उतर गए. उनके जज्बे को दिल से सलाम.
मानवता की सेवा के लिए #Khaakhi कोई भी जोखिम उठाने से पीछे नहीं हटती. pic.twitter.com/sJlBoOwvov
இந்த பதிவை பலர் பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும் பலர் தங்களது கருத்துக்களையும் இதில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், "தனது பணிக்கும் மேலான ஒன்று இது தான்.. உங்களுக்கு எனது சலியுட்" என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் "எல்லாவற்றையும் காட்டிலும் மனிதாபிமானமே சிறந்தது" என்று பதிவிட்டுள்ளார். மூன்றாவதாக ஒருவர், "இந்த சிறந்த மனிதருக்கு எனது பாராட்டுக்கள். கடவுள் இவரை ஆசீர்வதிப்பார்" என்று கூறியுள்ளார். மேலும் பல நெட்டிசன்கள் இவரின் நல்ல மனதை குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை அவசியம் எல்லோரும் ஒரு முறை பார்த்தாக வேண்டும்.
இது போன்ற மனிதர்கள் இந்த பூமியில் இருக்கும் வரையில் மற்றவர்களும் சந்தோஷமாக வாழ முடியும். இன்றைய கால கட்டத்தில் தன்னுடன் இருக்க கூடிய மனிதர்களுக்கு உதவ மனம் வராத மனிதர்களுக்கு இடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இந்த வீட்டு காவலரின் செயல் தலை வணங்க கூடிய ஒன்றாகும். அதுவும் ஒரு வாய் இல்லாத ஜீவன் ஒன்றிற்கு தனது உயிரை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், இவர் உதவியது தான் பலரின் மனதை உருக செய்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.