முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தன்னுடைய பெற்றோர்களுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்திய விவசாயி - நெகிழ்ச்சி சம்பவம்.!

தன்னுடைய பெற்றோர்களுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்திய விவசாயி - நெகிழ்ச்சி சம்பவம்.!

தெலுங்கானா விவசாயி

தெலுங்கானா விவசாயி

Trending | தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த “சின்னி கிருஷ்ணுடு” என்பவர் “சுபாஷ் பாலேக்கர்” என்ற இயற்கை விவசாயியை முன்மாதிரியாக கொண்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

72 வயதான இயற்கை விவசாயியான சின்னி கிருஷ்ணுடு தன்னுடைய பெற்றோரின் உருவப்படத்தை நெற்பயிர்களை கொண்டு, தன்னுடைய வயலில் மிகப்பெரிய அளவில் வரைந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். தன்னுடைய கிராமத்து மக்களால் “கங்காரம்” என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், “நகுலா சின்னு கங்காரம்” என்னும் இவர் தெலுங்கானா மாநிலம், நிசாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த சிந்தலூர் என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். வேதிபொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தியே இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

இயற்கை விவசாயத்தில் வல்லுனராக கருதப்படும் “சுபாஷ் பாலேக்கர்” என்பவரை தனது குருவாக கொண்டு கிரிஷ்ணுடு, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மற்றுமொரு விவசாய வல்லுனரான ராஜீவ் தீக்ஷித் என்பவரின் புத்தகங்களை படித்து அந்த வழிகாட்டுதல்களையும், விவசாய முறைகளையும் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். அந்த வழிமுறைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான அரிசி வகைகளை தனது வயலில் விளைவித்து உள்ளார். பல்வேறு நாடுகளில் உள்ள 110 வரைக்கும் மேற்பட்ட அரிசி வகைகளை தன்னுடைய வயலில் விளைவித்து அரியதொரு சாதனை படைத்துள்ளார்.

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் முறையில் விவசாயம் செய்யும் இவர் பல விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். மேலும் இவர் விளைவிக்கும் விளைபொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் உள்ளது.

பாரம்பரிய முறையில் பல்வேறு புதிய அம்சங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் இவர் டிசம்பர் 16, 2020 அன்று, அப்போதைய துணை குடியரசுத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்களிடம் விவசாயத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் “ரித்துநேஷ்தம்” என்னும் விருதை பெற்றுள்ளார். விவசாயத்துறையில் சாதித்ததன் மூலம் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்களையும் பெரும் புகழையும் பெற்ற கிருஷ்ணுடு தன்னுடைய பெற்றோரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்பினார்.

Also Read : பாலைவனத்தில் பூக்களா? பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்.... கண்ணைக் கவரும் காட்சிகள் !

தன்னுடைய பெற்றோருக்கு தனித்துவமாக ஏதேனும் ஒன்று செய்ய விரும்பிய அவர், தன்னுடைய ஒரு ஏக்கர் விளைநிலத்தை அறுவடைக்கு தயார் செய்தார். அந்த நிலத்தில் பங்காரு குலாபி, பஞ்சரத்னா, சிண்டலூரு எனும் பலவிதமான நெல் வகைகளை விளைவித்தார். தன்னுடைய பெற்றோரின் உருவப்படத்தை வயல்வெளியில் பிரம்மாண்டமாக வரைந்து வைத்தவர் அதனை சுற்றிலும் இரண்டு விதமான நெல் வகைகளை பயிர் செய்தார்.

அந்த பயிர் வகைகள் வளர வளர அவர் வரைந்த அந்த ஓவியமும் முழுமையாக தெரிய துவங்கியது.. வானத்திலிருந்து பார்க்கும்போது அவரின் பெற்றோரின் ஓவியமானது மிகத் தெளிவாகவும் அழகாகவும் தெரிந்தது. வெளி உலகத்திற்கு இதனை தெரியப்படுத்த விரும்பிய அவர் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி தான் வரைந்த தன்னுடைய பெற்றோரின் ஓவியத்தை பதிவு செய்து அதனை வெளியிட்டுள்ளார்.

Also Read : சினிமா பட பாணியில் 8 மாசமாக இயங்கிய போலி காவல்நிலையம்.. மர்ம நபர்கள் சிக்கியது எப்படி.?

கிருஷ்ணுடுவின் இந்த நெகிழ்ச்சியான செயலை கண்ட பலர் “இவர் விவசாயிகளுக்கு மட்டும் முன்மாதிரியாக திகழாமல், ஒரு சிறந்த மகனாகவும் தன்னை நிரூபித்து விட்டார்” என்று பாராட்டி வருகின்றனர்.

First published:

Tags: Farmer, Paddy fields, Trending, Viral