ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆணுறுப்பை அளக்க முயன்ற சிறுவன்.. USB Cable சிக்கிக்கொண்ட பரிதாபம்

ஆணுறுப்பை அளக்க முயன்ற சிறுவன்.. USB Cable சிக்கிக்கொண்ட பரிதாபம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அந்தரங்க உறுப்பை அளக்கும் முயற்சியில் சிறுவன் ஒருவர் யூஎஸ்பி கேபிளில் சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிரிட்டனை சேர்ந்த  15 வயது சிறுவனுக்கு தோன்றிய விபரீத எண்ணம் அவரது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துள்ளது.

  பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் தனது அந்தரங்கப்பகுதி எவ்வளவு பெரியது என்பதை அறிய விரும்பியுள்ளார். இதன்காரணமாக தனது அறையில் இருந்த USB கேபிளை தனது அந்தரங்க பகுதியில் செலுத்தி அளவிட முயன்றுள்ளான். ஒரு கட்டத்தில் கேபிளானது சிக்கிக்கொண்டது. உடனே அதனை வெளியே எடுக்க முயன்றுள்ளான். ஆனால் கேபிள் சிக்கிக்கொண்டதால் அந்தரங்கப்பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறித் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் தனது பெற்றோரை அழைத்து தனது விபரீத விளையாட்டு குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

  Also Read:  கள்ளக்காதல் தகராறில் ரவுடி மனைவி வெட்டிக்கொலை - கூட்டாளிகள் கைது

  மருத்துவர்கள் அந்தரங்க பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். உள்ளூர் மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. காரணம் கேபிளில் முடிச்சு இருந்ததால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து அந்த சிறுவன் லண்டன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

  அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். தனது தாயை வெளியில் அனுப்பிவைத்துவிட்டு பரிசோதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவரது தாய் வெளியில் காக்கவைக்கப்பட்டார். மருத்துவர்களின் கேள்விக்கு பதிலளித்த சிறுவன் தன் அந்தரங்க பகுதி எவ்வளவு பெரியது என அறிய விரும்பி இவ்வாறு செய்தேன் எனக் கூறியுள்ளார்.

  Also Read: ரேவ் பார்ட்டி.. நடன அழகிகள் நிர்வாண நடனம்.. போதை சப்ளை - தனியார் ரிசார்டில் ஆட்டம் போட்ட கும்பல்

  மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் நல்ல மனதிடத்தோடு இருப்பது தெரியவந்தது. பாலியல் ஆசையில் இதுபோன்ற விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த கேபிளை வெளியில் எடுத்தனர். அந்த இளைஞனுக்கு கேபிளால் உள் காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் கழித்து அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பிறகு ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளனர்.

  பாலியல் இன்பத்திற்காக ஆண் குறியில் பொருள்களை இதுபோன்று செலுத்துவது என்பது ஆபத்தானது. அது பல்வேறு பிரச்னையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Doctor, Hospital, Treatment, Youths