கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த போதும் டிக்டாக் செய்த பெண்கள்..! வைரல் வீடியோ

கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த போதும் டிக்டாக் செய்த பெண்கள்..! வைரல் வீடியோ
டிக்டாக் வைரல்
  • News18
  • Last Updated: December 4, 2019, 8:24 AM IST
  • Share this:
அமெரிக்காவின் Pittsburgh நகரில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய 2 பெண்கள் அந்த தருணத்திலும் டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.

இளம்பெண்கள் வெளியே சென்றபோது காரை வளைவுப் பாதையில் திருப்பியபோது புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

”போலீஸ் வரும் வரை காருக்குள்ளேயே காத்துக்கொண்டிருந்தோம்.  அந்த நேரத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. அனைவரும் பயத்திலும் பதட்டத்திலும் இருந்தோம்.


அந்த மனநிலையை மாற்றவும்.. அதிலிருந்து வெளிவரவுமே டிக்டாக் செய்தோம். உண்மையிலேயே அது எங்களுக்கு நல்ல பலன் தந்தது” என்று அதில் டிக்டாக் வீடியோ எடுத்த 16 வயது பெண் கேட்டி கார்னெட்டி கூறியுள்ளார்.விபத்தில் அந்த பெண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாவிட்டாலும், அவர்களின் டிக் டாக் மோகத்தை பலர் விமர்சித்துவருகின்றனர். 

 
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading