புனேவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளி: நடனம் ஆடி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் நடனம்

Symbiosis சொசைட்டி பள்ளியின் முதன்மை இயக்குநர் வித்யா யரவ்தேகர் ( Vidya Yeravdekar ) , இந்த தொற்றுநோய் மாணவர்களை தங்கள் பள்ளிகளிலிருந்து விலக்கிவைக்க கட்டாயப்படுத்தியது, ஆனால் அவர்கள் பள்ளிக்கு எப்போது செல்வதென்று ஆவலாய் இருந்தனர்.

  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று கல்வித்துறையில் அதிகளவில் மாற்றங்களை ஏற்பட்டுத்தியுள்ளன. கல்லூரி மற்றும் பள்ளிகளில் பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டு வந்தன. தற்போது வைரஸ் தொற்று குறைந்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த புதன்கிழமை, புனேவில் பிரபாத் சாலையில் உள்ள Symbiosis பள்ளிக்கு 5-ம் வகுப்பு மாணவர்கள் வந்தபோது, ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்யும் இதர பணியாளர்கள் மாணவர்களை நடனம் ஆடி பள்ளிக்கு மீண்டும் வரவேற்றுள்ளனர். 

பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய வெல்கம் டான்ஸ் குறித்த வீடியோ பெற்றோர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே வைரலாகி வருகிறது. வீடியோவில், ஆசிரியர்கள் பிரபல மகாராஷ்டிர நடனமான லெசிம் நடனத்தை ஆடுகின்றனர். மாணவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி நின்று பார்க்கின்றனர். இந்த டான்ஸ் முடிந்ததும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பாராட்டினர்.

Symbiosis சொசைட்டி பள்ளியின் முதன்மை இயக்குநர் வித்யா யரவ்தேகர் ( Vidya Yeravdekar ) , இந்த தொற்றுநோய் மாணவர்களை தங்கள் பள்ளிகளிலிருந்து விலக்கிவைக்க கட்டாயப்படுத்தியது. ஆனால் அவர்கள் பள்ளிக்கு எப்போது செல்வதென்று ஆவலாய் இருந்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த தருணத்தை நாங்கள் கொண்டாட விரும்பினோம், இது நம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது’ என்று  கூறியுள்ளார். ஜனவரி 27-ம் தேதி, மகாராஷ்டிரா அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஏழாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இப்போது திறக்கப்படலாம் என்று கூறியது. பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை மாநில சுகாதாரத் துறை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் -19 தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித் துறையின் முந்தைய அனைத்து அறிவிப்புகளையும் சேர்த்து பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது. 

நவம்பர் மூன்றாம் வாரத்தில், மகாராஷ்டிரா அரசு 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்திருந்தது. இருப்பினும், இறுதி முடிவு மாவட்ட ஆட்சியர்களின் கையில் இருந்தது. ஆகையால், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக, மும்பை, புனே மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் நீண்ட மாதங்களாக மூடப்பட்டிருந்தன, ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ எண்களின் படி, சுமார் 78.47 லட்சம் மாணவர்கள் மகாராஷ்டிராவில் V முதல் VIII வகுப்புகளில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர். 

பெரும்பாலான மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதை விரும்பவில்லை என்றாலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இப்போது அதுவும் சாத்தியமாகி உள்ளது. அதுமட்டுமல்லாது பள்ளி நிர்வாகங்களுடன் எம்மாதிரியான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் பின்பற்றப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: