Home /News /trend /

குடியரசு தின வாழ்த்து கூறிய கிலிபால்... - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

குடியரசு தின வாழ்த்து கூறிய கிலிபால்... - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

கிலிபால்

கிலிபால்

Viral Video : இன்ஸ்டாகிராம் புகழ் கிலிபால் இந்திய குடியரசு தினத்திற்கு வாழ்த்து கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இன்ஸ்டாகிராம் புகழ் கிலிபால் இந்திய குடியரசு தினத்திற்கு வாழ்த்து கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் தான்சானியா நாட்டை சேர்ந்தவர். இது போன்று பல பாடலுக்கு இவர் ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக கிலி பால் 'ஊ அண்ட்டவா மாமா' தெலுங்கு பாடலுக்கு சிறப்பாக நடனமாடியிருந்தார்.

    அவரின் டான்ஸ் மூவ்ஸ் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு நாட்டை சேர்ந்தவர் இந்த அளவிற்கு இந்திய பாடல் ஒன்றிற்கு அசத்தலாக நடனமாடுவார் என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை. இந்த வீடியோவில் சமந்தா மற்றும் அல்லு அர்ஜுன் நடனமாடி இருப்பார்கள். அவர்களை போன்றே இவரும் அட்டகாசமான முறையில் நடனமாடி உள்ளார்.

    இந்த வீடியோவை சுமார் 2.6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் பலர் இந்த வீடியோவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் "அற்புதமான நடனம் ப்ரோ' என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு நபர் "உங்கள் ஆட்டம் வேற லெவல், இந்தியாவில் இருந்து என்னுடைய அன்பு வணக்கங்கள்" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் பலர் "சிறப்பான டான்ஸ் மூவிஸ் சார்" என்று பதிவிட்டு வருகின்றனர். இவர்களில் பலர் கிலி பாலின் தீவிர ரசிகர்கள் என்பதை அவர்களின் கமெண்ட்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.



     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)








     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)






    தற்போது கிலிபால் பதிவிட்டிருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் அடங்கிய வீடியோவில் பலரும் கிலிபாலிற்கு குடியரசு  தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி