உலகம் சுற்றும் தமிழன் ... பட்ஜெட்டில் செலவு செய்து ஊர் சுற்றி காட்டும் தமிழ் ட்ரெக்கர் சேனல் புவனி

தமிழ் ட்ரக்கர் சேனல் புவனி

தமிழ் மொழியை வைத்து கொண்டு உலகம் சுற்றும் தமிழ்ட்ரெக்கர் புவனி தனது யூடியூபில் 531 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ்களை வைத்துள்ளார்.

 • Share this:
  தமிழ்நாட்டு யூடியூப் சேனல்களில் தவிர்க்க முடியாத பட்டியலில் மக்கள் மனதில் முதல் இடம் என்றால் அது தமிழ்டக்கர் புவனி தான். இவருக்கென யூடியூபில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி கொண்டு உள்ளது. யூடியூபில் பார்க்க எக்கச்சக்க வீடியோக்கள் , சேனல்கள் இருந்தாலும் தற்போது புவனி தான் யூடியூப் பார்வையாளர்களின் நாயகனாக உள்ளார்.

  ட்ராவல் பிடித்தவர்கள் ஏராளம். ஆனால் அதனை செயலில் நிகழ்த்திக்காட்டியவர் புவனி. தமிழ் ட்ரெக்கர் சேனல் புவனிக்கு ட்ராவல் என்றால் அலாதி பிரியம். அதனை தனக்கென ஒரு அடையாளமாக வைத்து தற்போது அதில் பயணம் செய்து கொண்டும் உள்ளார். இவ்வளவு தூரம் உலகம் சுற்றும் தமிழ்ட்ரெக்கர் புவனி பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் தேர்ச்சி அடையவில்லை. தமிழ் மொழியை வைத்து கொண்டு உலகம் சுற்றும் தமிழ்ட்ரக்கர் புவனி தனது யூடியூபில் 531 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ்களை வைத்துள்ளார்.

  காட்டுவாசிகளுடன் மிருக வேட்டை , பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை என டிஸ்கவரியில் ஆங்கிலத்தில் கண்டு களித்ததை தமிழில் கூறி வருகின்றார். சமீபத்தில் இவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காட்டுவாசிகள் தேன் எடுக்கும் திக் திக் பயணம் வீடியோ 170,971 பார்வையாளர்களை பெற்றது.  இவர் எங்கு சென்றாலும்அந்த மனிதர்களோடு ஒன்றி விடுவதாகவும் , அவர்களின் கலாச்சாரத்தை மதிப்பதாகவும், அவர்கள் காட்டுவாசியாகவவே இருந்தாலும்., அதுவே உங்களின் தனிச்சிறப்பு என இவரது ரசிகர்கள் இவரை பற்றி தெரிவிக்கின்றனர்.     ஆப்ரிக்க நாட்டில் நடுங்க வைக்கும் காட்டில் ரியல் ஹண்டிங் என இவர் வெளியிட்ட வீடியோ 542,510 பார்வையாளர்களை பெற்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: