Home /News /trend /

பாரம்பரிய முறைப்படி பங்களாதேஷ் காதலியை மணந்த சென்னை பெண்

பாரம்பரிய முறைப்படி பங்களாதேஷ் காதலியை மணந்த சென்னை பெண்

டீனா -சுபிக்ஷா

டீனா -சுபிக்ஷா

பங்காளதேசிய பாரம்பரிய முறை மற்றும் இந்திய பிராமண முறைபடி நிச்சயதார்த்தம், திருமணம் என்று பக்காவாக நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
கனடாவின் கல்கரியில் குடியேறிய தமிழ்நாட்டைச் சேர்ந்த   சுபிக்ஷா தனது பங்களாதேஷ் காதலியை சென்னையில் கரம் பிடித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுபிக்ஷா டெலாய்ட்டில் பட்டய கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். தனது 19 வயதில் தான் ஒரு இருபாலினத்தவர் என்பதை உணர்ந்துள்ளார். அதை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள் சமூகம் குறித்து கவலைப்பட்டனர். இதனால் தங்கள் இந்திய சொந்தங்கள் தங்களை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள் என்றும் பயந்தனர்.

இதனால் தங்களது மகளது எண்ணங்களை மாற்ற முயற்சிகளை செய்துள்ளனர். ஆனால் சுபிக்ஷா தனது முடிவில் உறுதியாக இருந்து பெற்றோருக்கு புரிய வைக்க முயன்றார். சமூகமும் மாறுதல் அடைந்து தன்பாலின தம்பதிகளை ஏற்கத் தொடங்கியது. இந்த நிலையில் 29 வயதான அவர்  தனது பங்காளதேசிய காதலியை தற்போது பெற்றோர் சம்மதத்துடன் மணம் முடித்துள்ளார்.

கல்கரியில் ஒரு ப்ளே ஸ்கூல் நடத்தும் சுபிஸ்காவின் அம்மா பூர்ணபுஷ்கலா சுப்ரமணி "மதுரையில் வளர்ந்த நான் பின்னர் கத்தாரில் வாழ்ந்தேன். கனடாவுக்குச் சென்ற பிறகுதான் குயர் சமூகத்தைப் பற்றி அறிந்து கொண்டோம்,” என்கிறார்.

விரும்பி சாப்பிட்ட 'பகோடா' வையே குழந்தைக்கு பெயராக வைத்த இங்கிலாந்து தம்பதி!

டீனா வடகிழக்கு பங்களாதேஷில் உள்ள ஒரு சிறிய நகரமான மௌல்விபஜாரில் பழமைவாத இந்து குடும்பத்தில் இருந்து வந்தவர். ‘எனது அக்காவின் திருமணத்திற்கு பிறகு அவரோடு எனது பெற்றோரும் நானும் 2003 இல் மாண்ட்ரீலுக்கு வந்தோம். நான் ஒரு தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் என்பதை வீட்டில் சொன்னேன்.

ஆனால் எனது பெற்றோருக்கு LGBTQIA+ சமூகத்தை பற்றிய புரிதல் இல்லை. அவர்கள் எனக்கு ஒரு நோய் இருப்பதாக நினைத்து, அது சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் எனக்கு 19 வயதாக இருந்தபோது திருமணம் செய்து வைத்தார்கள். நான்கு வருடம் அவரோடு வாழ்ந்தேன். பின்பு பிரிந்து விட்டோம்” என்றார் டீனா.

கால்கரியில் உள்ள ஃபுட்ஹில்ஸ் மெடிக்கல் சென்டரில் உள்ள பேஷண்ட் கேரில் பணிபுரியும் டினா சுபிக்ஷாவை நான்கு வருடங்களுக்கு முன்பு LGBTQIA+ சமூகக் கூட்டத்தில் சந்தித்துள்ளார். 4 வருட காதலுக்கு பின்னர் இருவரும் தங்கள் வீட்டில் சொல்லியுள்ளனர். டீனாவின் குடும்பத்தில் அதை ஏற்கவில்லை.  மூத்த சகோதரி இவருடனான தொடர்புகளை முற்றிலும் தவிர்த்துவிட்டார்.

ஆனால், அவரது சகோதரரும் சமஸ்கிருத அறிஞரும், ஆசிரியருமான சௌரப் போண்ட்ரே தன சகோதரிக்கு துணையாய் நின்று, திருமண நாளன்று சடங்குகளுக்குத் தலைமை தாங்கி நடத்தினார். மும்பை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலைப் படிப்பின் ஒரு பகுதியாக வேத இலக்கியங்களைப் படித்த சௌரப், இது தான் நடத்தும் நான்காவது எல்ஜிபிடி திருமணமாகும் என்றார் . மற்ற திருமணங்களை போலவே இதுவும் அன்பு கொண்ட இரு மனங்களின் திருமணமே இது என்று கூறினார்.பங்காளதேசிய பாரம்பரிய முறை மற்றும் இந்திய பிராமண முறைபடி நிச்சயதார்த்தம், திருமணம்  நடந்துள்ளது.

"எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாய் நின்றதால், எங்கள் பெரிய குடும்பம் குழந்தைகளை ஆசீர்வதிக்க முன் வந்தது," என்று சுபிக்ஷாவின் தாயார் கூறுகிறார். சுபிக்ஷாவின் 84 வயதான பாட்டி எஸ் பத்மாவதி 'அன்பு தான் முக்கியம். என் பேத்தி இப்படி மகிழ்வாக இருந்தால் போதும். டீனாவை எங்கள் குடும்ப உறுப்பினராக ஏற்பதில் பெருமகிழ்ச்சி' என்று நெகிழ்ச்சிப்பட கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Bangladesh, Chennai, LGBT

அடுத்த செய்தி