ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

#தவிக்கும்தமிழ்நாடு தேசிய அளவில் ட்ரெண்டிங்!

#தவிக்கும்தமிழ்நாடு தேசிய அளவில் ட்ரெண்டிங்!

  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் பற்றி, நேற்று நாள் முழுவதும், நியூஸ் 18 தொலைக்காட்சியில் சிறப்புத் தொகுப்புகள் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அப்போது உருவாக்கப்பட்ட #தவிக்கும்தமிழ்நாடு ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

தண்ணீருக்காக தவித்த மக்களின் குரலை, சிறப்புத் தொகுப்புகளாக, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேற்று இடைவிடாது ஒளிபரப்பியது. மக்கள் தங்களின் ஆதங்கத்தை நேரலையில் நியூஸ் 18 தொலைக்காட்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில், தவிக்கும் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக், சமூக வலைதளங்களிலும் அளவில் டிரெண்டாகி வருகிறது. #தவிக்கும்தமிழ்நாடு ஹேஷ்டேக் தமிழக அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் இருந்தது. சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளனர்.

அதோடு மட்டுமின்றி, தண்ணீர் பஞ்சம் தொடர்பான தகவல்களை மக்கள் ஆர்வத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Save Water, Water Crisis