முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தாஜ்மஹாலை 'தேஜோ மஹாலயா' என்று பெயர் மாற்ற ஆக்ரா நகர சபையில் முன்மொழியும் பாஜக!

தாஜ்மஹாலை 'தேஜோ மஹாலயா' என்று பெயர் மாற்ற ஆக்ரா நகர சபையில் முன்மொழியும் பாஜக!

தாஜ் மஹால்

தாஜ் மஹால்

Tajmahal | புதைக்கப்பட்ட இடத்தை எப்படி 'மஹால்' (அரண்மனை) என்று அழைக்க முடியும், அது உண்மையில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் அபகரிக்கப்பட்ட ராஜா ஜெய் சிங்கின் சொத்து

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Agra, India

இந்தியாவின் புகழ்பெற்ற தாஜ்மஹாலை தேஜோ மஹாலயா என்று பெயர் மாற்ற ஆக்ரா நகர் நிகாம் சபையில்  பாஜகவால் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆக்ரா நகர் நிகாமின் (ANN) எனும் ஆக்ராவின் நகரசபை வேறு சில திட்டங்களின் வாக்குவாதத்தால் ஆன குழப்பத்திற்குப் பிறகு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதனால் இத்திட்டம் குறித்த விவாதம் எழவில்லை. எவ்வாறாயினும், இந்த திட்டம் அடுத்த அமர்வில் எடுக்கப்படும் என்று பாஜக உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

உத்திர பிரதேச ஹர்ஜுபுரா, தாஜ்கஞ்ச் வார்டு எண் 88 ஐ சேர்ந்த பாஜக உறுப்பினர் ஷோபா ராம் ரத்தோர்(60), நகர சபையில் இந்த முன்மொழிவை வைத்துள்ளார்.

“தாஜ்மஹாலின் பெயரை மாற்றுவதற்கு காரணம் அதன் உண்மையான பெயர் தேஜோ மஹாலயா என்று ஷோபா குறிப்பிடுகிறார். புதைக்கப்பட்ட இடத்தை எப்படி 'மஹால்' (அரண்மனை) என்று அழைக்க முடியும், அது உண்மையில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் அபகரிக்கப்பட்ட ராஜா ஜெய் சிங்கின் சொத்து. ஷாஜஹானின் மனைவியின் பெயர் அர்ஜுமந்த் பானோ. மும்தாஜ் அல்ல, வரலாற்றில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது முன்மொழிவில் குறிப்பிட்டுள்ளார்.

இனி சென்னைக்கு ஹைதராபாத்தில் இருந்தே பிரியாணியை வரவழைக்கலாம்... zomatoவின் செம்ம பிளான்..!

தாஜ்மஹால் உருவாவதற்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகானின் மனைவி புர்ஹான்பூரில் இறந்துவிட்டார். அர்ஜுமந்த் பானோவின் கல்லறை அங்கு உள்ளது. மன்னனின் இறந்த மனைவியின் உடல் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக எவ்வாறு பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது என்பது சந்தேகத்திற்குரியது. மேலும் இவை அனைத்தும் புனையப்பட்ட கதையின் ஒரு பகுதியாகும்.

வரலாற்றாசிரியர் பி என் ஓக் தனது புத்தகத்தில் அதை மறுத்துள்ளார். அதில் மூத்த வரலாற்றாசிரியர் தாஜ்மஹாலின் அமைப்பு உண்மையில் ஒரு இந்து கோவில் "தேஜோ-மஹாலயா" என்றும், அதிகாரத்தில் இருந்த முகலாய ஆட்சியாளரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதற்கு அவர் தாஜ்மஹால் என்று பெயரிட்டார்" என்றும் கூறியுள்ளார்.

"முந்தைய சில முன்மொழிவுகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டன, இதனால் எனது முன்மொழிவை எடுக்க முடியவில்லை, அவை ஒத்திவைக்கப்பட்டது. ஆக்ரா மேயர், நகர் நிகாமின் அடுத்த கூட்டத் தொடரில் இந்த முன்மொழிவை பட்டியலிடுவதாக உறுதியளித்துள்ளார், அது ஏற்றுக்கொள்ளப்படும்,” என்று ரத்தோர் கூறினார்.

விஜயின் ஹிட்டான 'சிம்டாங்காரன்' பாடல் பாடிய பம்பா பாக்யா காலமானார்!

தாஜ்மஹால் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்பதால், கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்படும் மத்திய அரசு அமைப்பான இந்திய தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் உள்ளது. இது போன்ற முன்மொழிவுகள், தாஜ் மஹால் ஒரு இது வரை நிரூபிக்கப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. இப்போதும் அது ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை.

இந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச், கோவிலை இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டது என்ற மனுவை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொது நல வழக்கு அமைப்பு. மனுதாரர், ரஜ்னீஷ் சிங் என்ற பாஜக தொண்டர், இந்து தெய்வங்களின் சிலைகளைக் கொண்ட பிரதான கல்லறைக்குக் கீழே பூட்டிய 22 நிலத்தடி அறைகள் உள்ளது என்று கூறிஅதைத் திறக்க உத்தரவிடுமாறு கோரியிருந்தார், ஆனால் மனு தள்ளுபடியானது.

இது தவிர, ஆக்ரா சிவில் நீதிமன்றங்களில் சில வழக்கறிஞர்கள் தாஜ்மஹாலை தேஜோ மஹாலயாவாகக் கருதி, தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் 'நமாஸ்' செய்வதைத் தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். இதை வைத்து பல்வேறு வலதுசாரி அமைப்புகள் தாஜ்மஹாலில் அவ்வப்போது போராட்டம் நடத்துகிறது.

First published:

Tags: Agra, BJP, Taj Mahal