விபத்தில் சிக்கி 62 நாட்கள் கோமாவில் இருந்தவர் கோழிக்கறி என கேட்டதும் கண் விழித்த அதிசயம்..

விபத்தில் சிக்கி 62 நாட்கள் கோமாவில் இருந்தவர் கோழிக்கறி என கேட்டதும் கண் விழித்த அதிசயம்..

கோப்புப்படம்.

விபத்தில் சிக்கி 62 நாட்கள் கோமாவில் இருந்தவர் கோழிக்கறி என கேட்டதும் கண் விழித்த அதிசயம் தைவான் நாட்டில் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  தைவானில் கடந்த ஜூலை மாதம் சாலை விபத்தில் சிக்கி சரியாக 62 நாட்கள் கோமாவில் இருந்த இளைஞர் கோழிக்கறி என்ற வார்த்தையைக் கேட்டதும் விழித்து எழுந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சியு (Chiu) என்னும் அந்த இளைஞர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததில் சிறுநீரகம், கல்லீரல், கணையம் உள்ளிட்ட உள் உறுப்புகள் சேதமடைந்ததால் சியு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

  62 நாட்களாக சுயநினைவின்றி இருந்த சியுவிடம் தம்பி, "உனக்கு பிடித்த chicken fillet-டை நான் சாப்பிடப்போகிறேன்" என விளையாட்டாக அவரது அண்ணன் கூற, திடீரென சியுவின் இதயத்துடிப்பு அதிகரித்தது. அடுத்த சில நிமிடங்களில் சியு சுய நினைவுக்கு வந்தது மருத்துவக் குழுவினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கோழிக்கறியால் மறுஜென்மம் எடுத்த சியு, தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு கேக் வழங்கி நன்றி தெரிவித்தார்.

  Also read: தமிழக மீனவர்களின் 121 படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்துக - சீமான் வலியுறுத்தல்

  விபத்தில் சிக்கி சுமார் இரண்டு மாதங்களாக கோமாவில் இருந்தவர் கோழிக்கறி என கேட்ட உடனேயே கண் விழித்த இந்த அதிசயச் சம்பவம் தைவான் நாட்டில் மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
  Published by:Rizwan
  First published: