செல்ல நாயை திருமணம் செய்து கொண்ட ஸ்விம்சூட் அழகி... 221 ஆண்களை டேட்டிங் செய்தும் திருப்தி இல்லை..!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பில் இந்தத் திருமணம் நிகழ்ந்துள்ளது.

news18
Updated: August 2, 2019, 2:19 PM IST
செல்ல நாயை திருமணம் செய்து கொண்ட ஸ்விம்சூட் அழகி... 221 ஆண்களை டேட்டிங் செய்தும் திருப்தி இல்லை..!
நாயை திருமணம் செய்து கொண்ட பெண்
news18
Updated: August 2, 2019, 2:19 PM IST
என்னதான் தனக்கான ஆண் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நாயை, திருமணம் செய்துகொள்வதா..?என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1980 களில் மிகவும் பிரபலமான ஸ்விம் சூட் அழகியாக வலம் வந்தவர்தான் எலிசபெத் ஹோட். 45 வயதான எலிசபெத் 25 வயது முதலே தனக்கான சரியான துணையைத் தேடும் படலத்தைத் தொடங்கியுள்ளார். அப்படி இதுவரை 221 ஆண்களை டேட்டிங் செய்துள்ளார். அந்த வரிசையில் கோல்ஃப் ஆட்டக்காரரான சேவ் பாலேஸ்டெரோஸ், கார் ரேசர் ஜேம்ஸ் ஹண்ட் ஆகியோரும் உள்ளனர்.

இது தவிர 6 டேட்டிங் இணையதளங்களில் 220 ஆண்களை டேட்டிங் செய்துள்ளார். இப்படி இத்தனைப் பேரை டேட்டிங் செய்தும் தனக்கு பிடித்தவர் கிடைக்கவில்லை.அவர்கள் யாரும் தனக்கான சரியான துணையாக இருப்பார்கள் என நம்பிக்கை இல்லை என்றக் காரணத்தால் தான் செல்லமாக வளர்த்து வந்த ’லோகன்’ நாயை திருமணம் செய்துள்ளார். அதுவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பில் இந்தத் திருமணம் நிகழ்ந்துள்ளது.

திருமணம் முடிந்தபின் அவர்களின் வழக்கப்படி வாயோடு வாய் முத்தத்தையும் பகிர்ந்துகொண்டனர்.இதற்கு முன் ஏற்கனவே ஒரு நாயை வளர்த்துக் கொண்டிருக்க அது சமீபத்தில்தான் இறந்தது. அதன் பிறகு வளர்த்த நாய்தான் இந்த லோகன். தற்போது இந்த நாய்க்கு 6 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...