ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

26 வீல்கள், நீச்சல் குளம், ஹெலிபேட்... உலகின் மிக நீளமான காரை மறுசீரமைப்பு செய்யும் பணி தீவிரம்!

26 வீல்கள், நீச்சல் குளம், ஹெலிபேட்... உலகின் மிக நீளமான காரை மறுசீரமைப்பு செய்யும் பணி தீவிரம்!

உலகின் மிக நீளமான கார்

உலகின் மிக நீளமான கார்

லிமோசின் 30.5 மீட்டர் (100 அடி) நீளம் கொண்டது மற்றும் 26 வீல்களை கொண்டுள்ள இந்த நீளமான கரை இருபுறமும் இயக்க முடியும் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உலகின் மிக நீளமான கார் என்ற பெருமையையும், புகழையும் கொண்ட லிமோசின் டைப் வாகனமான "The American Dream" காரை மறுசீரமைக்கும் பணி தொடங்கி இருக்கிறது. இது உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் 1986-ல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த 100-அடி நீளம் (30.5 மீட்டர்) கொண்ட limousine டைப் கார் மிகவும் திறமை கொண்டடிசைனரான ஜே ஓர்பெர்க் (Jay Ohrberg) என்பவரால் உருவாக்கப்பட்டது.

இவர் தான் டெலிவிஷன் சீரிஸான Knight-ல் பயன்படுத்தப்படும் பிரபல காரையும் வடிவைமைத்தார். "Back to the Future" திரைப்படத்தில் DeLorean போன்ற குறிப்பிடத்தக்க ஹாலிவுட் கார்களை வடிவமைத்தவரும் இவரே. உலகின் மிக நீளமான கார் "தி அமெரிக்கன் ட்ரீம்" பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தற்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

26 சக்கரங்கள்..

இந்த லிமோசின் 30.5 மீட்டர் (100 அடி) நீளம் கொண்டது மற்றும் 26 வீல்களை கொண்டுள்ள இந்த நீளமான கரை இருபுறமும் இயக்க முடியும் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மேலும் இது 1976 Cadillac Eldorado லிமோசின்களை அடிப்படையாக கொண்டது. 1980-களில் இதை வடிவமைக்க தொடங்கிய ஓஹர்பெர்க் இறுதியில் தனது கனவை நிஜமாக்கினார். இந்த காரின் முன் மற்றும் பின்புறத்தில் ஒரு ஜோடி V8 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்விம்மிங் பூல் & ஹெலிபேட்..

இது வெறும் நீளமான கார் மட்டுமல்ல, ஆடம்பர சொகுசு வாகனமாகவும் டிசைன் செய்யப்பட்டது. நீச்சல் குளம், ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ஃப் மைதானம் மற்றும் ஒரு ஹெலிபேட் கூட The American Dream காரில் இடம் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்ய முடியும் என்பதால் இது பல டிவிகள் மற்றும் ஃபிரிட்ஜ்கள் மற்றும் ஃபோன் கனெக்ஷன்கள் உள்ளிட்ட இன்னும் பல வசதிகளை கொண்டது.

கட்டணம்..

அதிகாரப்பூர்வமாக கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்ற பிறகு அமெரிக்கன் ட்ரீம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதே போல இந்த கார் சினிமாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதன் தனிப்பட்ட உபயோகத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 50 டாலர் முதல் 200 டாலர் வரை கட்டணமும் வசூலிக்கப்பட்டது. "தி அமெரிக்கன் ட்ரீம்" என்று பெயரிடப்பட்ட இந்த படைப்பின் வெளிச்சம் ஒரு கட்டத்தில் மங்கிவிட்டது,

இவ்வளவு பெருமை மற்றும் அம்சங்களை உள்ளடக்கிய The American Dream கார் ஒருகட்டத்தில் கைவிடப்பட்டு முறையான பராமரிப்பின்றி பரிதாபகரமான நிலைக்கு சென்றது.

Also read... தெர்மாகோலுக்கே டஃப் கொடுத்த டெல்லி அரசு... யமுனா நதியில் நுரையோடு மல்லுக்கட்டு

பராமரிப்பில்லாததால் சக்கரங்கள் மற்றும் காரின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்தன. பெருமை வாய்ந்த அமெரிக்கன் ட்ரீமை மீட்டெடுக்கும் முயற்சியில் நியூயார்க்கின் நாசாவ் கவுண்டியில் உள்ள ஒரு தொழில்நுட்ப கற்பித்தல் அருங்காட்சியகமான ஆட்டோசியம் ஈடுபட்டது. பின் ஆகஸ்ட் 2019 இல் லிமோசினின் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது. எனினும் கோவிட் காரணமாக தடைபட்ட மறு சீரமைப்பு பணிகள் மீண்டும் துவங்கி இருக்கிறது. எனினும் உலகின் நீளமான காரை சீரமைப்பது என்பது எளிதான பணி அல்ல, பணி மெதுவாக நடந்து வருகிறது. American Dream-ன் வெளிப்புற மறுசீரமைப்பு வேலைகள் பெரும்பாலானவை முடிக்கப்பட்டுள்ள நிலையில், கார் முழுவதும் அதன் பழைய நிலைக்கு கொண்டுவரபட்டவுடன் Dezerland park-ல் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

First published:

Tags: Trending