சாலை விதிகளை மதித்தால் ஸ்விகி, ஜொமேட்டோ 50% தள்ளுபடி கூப்பன்..!

போலீஸார், ஸ்விகி மற்றும் ஜொமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப் நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தமிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 12:21 PM IST
சாலை விதிகளை மதித்தால் ஸ்விகி, ஜொமேட்டோ 50% தள்ளுபடி கூப்பன்..!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 19, 2019, 12:21 PM IST
சாலை விதிகளை மதித்து செயல்படும் வாகன ஓட்டிகளை போக்குவரத்துப் போலீஸார் கண்டறிந்து அவர்களுக்கு 50% தள்ளுபடி உடனான ஸ்விகி மற்றும் ஜொமேட்டோ கூப்பன்களை அளித்து வருகின்றனர்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. மக்கள் தொகை மிகுதியால் வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. போக்குவாத்து விதிகளை மதிக்காமல் சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும்போது அது பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

போக்குவரத்தில் ஒழுங்குமுறை கொண்டு வர நினைத்த புனே போலீஸார் புதியதொரு யுத்தியை செயல்படுத்தி உள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகர போலீஸார், ஸ்விகி மற்றும் ஜொமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப் நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தமிட்டுள்ளது.


இதன் அடிப்படையில், சாலை விதிகளை மதித்து முறையாக வாகனம் ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஸ்விகி மற்றும் ஜொமேட்டோவின் 50% தள்ளுபடி கூப்பன்களை பரிசாக அந்நகர போக்குவரத்துப் போலீஸார் கொடுத்து வருகின்றனர். ஜூன் 14-ம் தேதி முதல் செயல்பட்டு வரும் இத்திட்டம் நல்ல பலன் தருவதாகவும் இதுவரையில் 10ஆயிரம் கூப்பன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் புனே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: ஒரே நாளில் சுமார் 6000 பேர் முன்பதிவு- சாதனை படைத்த கியா செல்டாஸ் கார்!
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...