Home /News /trend /

கொட்டும் மழையிலும் உணவு டெலிவரி செய்த ஊழியர் - வைரல் வீடியோ

கொட்டும் மழையிலும் உணவு டெலிவரி செய்த ஊழியர் - வைரல் வீடியோ

காட்சி படம்

காட்சி படம்

மழை, வெயில், புயல், வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் தங்களுடைய பணியை இடைவிடாது பார்ப்பார்ப்பவர்கள் தான் டெலிவரி முகவர்கள்.

    கனமழைக்கு மத்தியில் ரெயின்கோட் எதுவும் அணியாமல் உணவை வாடிக்கையாளர்களிடம் எப்படியாவது டெலிவரி செய்ய வேண்டும் என டிராஃபிக் சிக்னலில் மழையில் நனைந்துக்கொண்டே காத்திருக்கும் ஸ்வீக்கி ஊழியரின் வீடியோ இதயத்தை ரணமாக்குகிறது. இதுவரை இந்த வீடியோ 5 மில்லியன் பார்வைகளையும், 20 லட்சத்திற்கும் அதிகமான லைக்குளையும் பெற்றுள்ளது.

    மழை, வெயில், புயல், வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் தங்களுடைய பணியை இடைவிடாது பார்ப்பார்ப்பவர்கள் தான் டெலிவரி முகவர்கள். இவர்களுக்கான ஊதியம் என்பது குறைவது தான்.. ஆனாலும் தங்களுக்குக் கொடுத்த பணிகளையும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாத வகையில் நேர்த்தியாக வேலை செய்துவருகின்றனர். இன்றைய சூழலில் வீடுகளில் சமைக்கிறமோ? இல்லையோ? உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ஸ்விக்கி, ஸ்மோட்டா போன்ற உணவு விநியோக தளங்கள் இதற்காக செயல்படுகிறது. பைக், சைக்கிள், சில நேரங்களில் குதிரை வண்டியில் கூட சென்று வாடிக்கையாளர்களிடம் உணவுகளை சேர்த்து விடுகின்றனர் இந்த டெலிவரி ஏஜென்ட்கள்.. எந்த இயற்கை சீற்றங்களிலும் தங்களுடைய பணியை செம்மையாக மேற்கொள்ளும் ஊழியர்களில் சிலர் தான் வெளிச்சத்திற்கு வருகின்றனர்.

    Also Read : பபுள் கம்மை மென்று ரூ.67,000-க்கும் மேல் சம்பாதிக்கும் இளம்பெண் - எப்படி தெரியுமா?

    அப்படித்தான் கொட்டும் கனமழையில், ரெயின்கோட் எதுவும் அணியாமல் உணவை வாடிக்கையாளர்களிடம் எப்படியாவது டெலிவரி செய்ய வேண்டும் என டிராஃபிக் சிக்னலில் மழையில் நனைந்து கொண்டே காத்திருக்கும் ஸ்வீக்கி ஊழியரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. தினேஷ் கொம்மா என்ற இன்ஸ்டாகிராம் யூசர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பணியாளர்களின் “வாழ்க்கை அனைவருக்கும் எளிதானது அல்ல“ என வாசகத்துடன் மழையில் நனைத்துக்கொண்டே உணவு விநியோகிக்க செல்லும் ஊழியரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Dinesh Komma (@frinds.dinesh)






    இதனை பார்த்த நெட்டிசன்கள், ஸ்விக்கி ஊழியரின் இடைவிடாத அர்ப்பணிப்பான உணர்வு பாராட்டுதலுக்கு உரியது என்றும், அவரது கடமைக்காக ஒரு சல்யூட் என்றும் பதிவிட்டனர்.மேலும் மற்றொரு இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர், இந்த ஊழியர் தன்னுடைய அழகான குடும்பத்திற்காக இப்படி உழைக்கிறார் எனவும் மற்றொருவர் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஜெயிப்பதற்குப் போராடுகிறார்கள்.. இவர்களை எப்போதும் நாம் மதிக்க வேண்டும் என்ற கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதோடு மழைக்காலங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு விநியோக நிறுவனங்கள் மழைக்காலத்திற்கு தேவையான ரெயின்கோட் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி