Home /News /trend /

வயதான தம்பதியினரின் மகனை கண்டுபிடிக்க உதவிய ஸ்விக்கி ஏஜென்ட் - உயிர்ப்புடன் வாழும் மனித நேயம்.!

வயதான தம்பதியினரின் மகனை கண்டுபிடிக்க உதவிய ஸ்விக்கி ஏஜென்ட் - உயிர்ப்புடன் வாழும் மனித நேயம்.!

ஸ்விக்கி ஏஜென்ட்

ஸ்விக்கி ஏஜென்ட்

Swiggy Delivery Agent | உணவு விநியோக ஏஜென்ட்கள் உயிர்ப்புள்ள மனிதாபிமானத்தை உலகிற்கு பறைசாற்றும் அளவிலான ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது… என்ன நடந்தது தெரியுமா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Secunderabad, India
இன்றைக்கு மக்களின் தேவைகளை அறிந்து உணவை டெலிவரி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஐடி நிறுவன ஊழியர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என பலரும் பெரும்பாலும் வீட்டில் சமைப்பது கிடைக்காது. தங்களுடைய ஸ்மார்ட்போனின் மூலம் நொடியில் அனைத்து விதமான டிஸ்களையும் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். இவர்களுக்காக ஸ்விக்கி, சொமோட்டோ என பல உணவு விநியோக நிறுவனங்கள் அவ்வப்போது உணவுகளை ஆஃபரில் வழங்குகின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும், இந்த உணவு விநியோக நிறுவனங்களால் பெண்கள் உள்ளிட்ட பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியாகிறது. இன்ஜினியரிங் முடித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இப்பணியில் ஈடுபடுகின்றனர். தினமும் காலையில் டீ சப்ளை ஆரம்பித்து இரவு டின்னர் வரை வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவுகளை முகம் சுழிக்காமல் விநியோகித்து வருகின்றனர். பைக்கில் சுமையை சுமந்தப்படி டிராபிக்கில் நின்று தங்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நிற்காமல் ஓடும் இவர்களுக்கு உள்ளேயும் உள்ள மனிதாபிமானம் கொட்டிக் கிடக்கிறது. இவர்களிடம் உயிர்ப்புள்ள மனிதாபிமானத்தை உலகிற்கு பறைசாற்றும் அளவிலான ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது… என்ன நடந்தது தெரியுமா?

மனித நேயத்தைப் பறைசாற்றும் டிவிட்டர் பதிவு….

பெங்களுரில் வசிக்கும் சாய் கண்ணன் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், தன்னுடைய அம்மாவிற்கு தெரிந்த வயதான தம்பதியினர் சென்னையில் வசிக்கின்றனர் எனவும், வயதான தம்பதியினரின் மகன் செகந்தராபாத்தில் பணிபுரிவதாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன் கடந்த இரண்டு நாள்களாக போன் செய்யவில்லை. நாங்கள் அழைத்தாலும் போனை எடுக்கவில்லை. மிகவும் பயமாக உள்ளது என கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் செகந்திராபாத்தில் தன் மகன் வசிக்கும் இல்ல முகவரியையும் கொடுத்து உதவி செய்ய முடியுமா? என கேட்டுள்ளனர்.உடனடியாக யாராலும் அங்கு செல்ல முடியாது என்பதால், யார் ?உடனே நமக்கு உதவி செய்வார்கள் என்று யோசித்த போது, உணவு டெலிவரி முகவர்கள் தான் நினைவுக்கு வந்துள்ளனர். உடனே செகந்திரபாத் அட்ரசுக்கு சில உணவுகளை ஆர்டர் செய்து விநியோகிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.. ஆர்டர் செய்து முடித்தவுடன் வந்த டெலிவரி ஏஜென்டுக்கு கால் செய்து, எப்படியாவது உணவைக் கொண்டு சேர்த்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். சில டெலிவரி ஏஜென்ட்டுகள் போல் இல்லாமல், ஸ்ரீகாந்த் என்ற டெலிவரி செய்யும் நபர், “ தான் ஒரு உணவு டெலிவரி செய்யும் இடத்தில் இருப்பதாகவும், 30 நிமிடத்தில் உங்களது உணவை டெலிவரி செய்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Also Read : உலகிலேயே உயரமான செனாப் பாலம்.. கண் கவரும் போட்டோக்களை பகிர்ந்த இந்திய ரயில்வே.! 

டெலிவரி ஏஜென்ட் சொன்னது போல, அரை மணிநேரத்தில் வயதான தம்பதியினரின் மகன் வீட்டிற்கு சென்றதோடு, உணவை ஆர்டர் செய்த நபருக்கு கால் செய்து கொடுத்துள்ளார். அப்போது தான், வயதான தம்பதியினரின் மகனுக்கு விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. பெற்றோர்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்பதற்காக இதை சொல்லாமல் மறைத்துள்ளார்.

ஒரு மகனைத் தேடி அலைந்த பெற்றோர்களுக்கு உணவு டெலிவரி வாயிலாக கண்டுபிடித்துக் கொடுத்த இந்த டெலிவரி ஏஜென்ட் செயல் நிச்சயம் பராட்டுதலுக்குரியது என்றும், மனித நேயம் இதுப்போன்றவர்களால் தான் இன்னமும் உயிர்ப்புடன் வாழ்கிறது என வாழ்த்துக்களை பரிமாறுகின்றனர் நெட்டிசன்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Food Delivery boys, Swiggy, Trending

அடுத்த செய்தி