ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கேக்குல முட்டை இருந்தா சொல்லிடுங்க..! வாடிக்கையாளர் கேள்விக்கு பேக்கரி ஊழியர்கள் கொடுத்த ஷாக்

கேக்குல முட்டை இருந்தா சொல்லிடுங்க..! வாடிக்கையாளர் கேள்விக்கு பேக்கரி ஊழியர்கள் கொடுத்த ஷாக்

Image : (Source : Twitter)

Image : (Source : Twitter)

Trending | ஆன்லைனில் ஆர்டர் செய்தால் கூட, உணவு நம்முடைய விருப்பம் சார்ந்து உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வோம். மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரும் இதேபோல தன் சந்தேகத்தை எழுப்பியிருந்தார். ஆனால், அவருக்கு கிடைத்த பதில், சிரிப்பையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உணவு என்பது தனிநபர் விருப்பம். சைவமாக இருந்தாலும், அசைவமாக இருந்தாலும், முட்டை மட்டும் சேர்த்துக் கொள்ளக் கூடியவராக இருந்தாலும் தத்தமது விருப்பங்களுக்கு உணவை தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த வகையில், நாம் வெளியிடங்களுக்கு சாப்பிடச் சென்றால், நம் விருப்பத்திற்கு தகுந்தாற்போல அமைந்துள்ள உணவகத்தில் சாப்பிடுவதை நாம் வழக்கமாக வைத்திருப்போம்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் கூட, உணவு நம்முடைய விருப்பம் சார்ந்து உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வோம். மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரும் இதேபோல தன் சந்தேகத்தை எழுப்பியிருந்தார். ஆனால், அவருக்கு கிடைத்த பதில், சிரிப்பையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த கபில் வாஸ்னிக் என்பவர் அண்மையில் ஸ்விக்கி மூலமாக பேக்கரி ஒன்றில் கேக் ஆர்டர் செய்திருந்தார். ஆர்டரை உறுதி செய்வதற்கு முன்பாக, பேக்கரி ஊழியர்களிடம், கேக்கில் முட்டை சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை சொல்லி விடுங்கள் எனக் கேட்டிருந்தார் அவர். சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்த கேக்-ஐ பார்த்த அவருக்கு வினோதமான அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, “முட்டை இருக்கிறது’’ என்ற வாசகத்தை கேக் மீது க்ரீம் வைத்து எழுதியிருந்தனர் பேக்கரி ஊழியர்கள். அதாவது, முட்டை இருந்தால் முன்கூட்டியே சொல்லி விடுங்கள் என்று வாடிக்கையாளர் முன்வைத்த கேள்வியை தவறாகப் புரிந்து கொண்ட ஊழியர்கள், முட்டை இருக்கிறது என கேக் மீது எழுதி அனுப்பியிருக்கின்றனர்.

டிவிட்டரில் பிரச்சினையை கொட்டித் தீர்த்த கபில் வாஸ்னிக்

தனக்கு நேர்ந்த வினோதமான அனுபவம் குறித்து டிவிட்டரில் தகவல் பகிர்ந்து கொண்டார் கபில் வாஸ்னிக். அந்தப் பதிவில், “நாக்பூரில் உள்ள பிரபலமான பேக்கரி ஒன்றில் நான் ஸ்விக்கி மூலமாக கேக் ஆர்டர் செய்தேன். ஆர்டர் குறித்த விவரத்தில், கேக்கில் முட்டை இருந்தால் சொல்லி விடுங்கள் எனக் கூறியிருந்தேன். அதைத் தொடர்ந்து, வீட்டுக்கு வந்து சேர்ந்த கேக்-ஐ பார்த்து நான் வாயடைத்து போனேன். கருப்பு கலர் கேக் மீது வெள்ளை கலரில், “முட்டை இருக்கிறது’’ என எழுதியிருந்தனர்’’ என்று கூறியுள்ளார்.

Also Read : இலவச பெட்ரோல் பங்க்... அதிரடியாக அறிவித்து வாரிக்கொடுக்கும் யூ-டியூபர்!

வைரல் ஆன பதிவு

கடந்த மே 20ஆம் தேதி டிவிட்டரில் பதிவு செய்யப்பட்ட இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. டிவிட்டரில் சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு மேல் இதை லைக் செய்துள்ளனர். 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீ-டிவீட் செய்துள்ளனர்.

இதற்கு நெட்டிசன்கள் அளித்துள்ள பதிலில், இதேபோல தாங்கள் கேக் ஆர்டர் செய்தபோது ஏற்பட்ட விசித்திரமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கேக் ஆர்டர் செய்த வாடிக்கையாளரிடம் என்ன எழுத வேண்டும் என பேக்கரி ஊழியர்கள் கேட்க, அவர் Nothing (ஒன்றும் வேண்டாம்) என பதில் அளித்தாராம். ஆனால், அதையே கேக் மீது எழுதி ஷாக் கொடுத்திருக்கின்றனர் பேக்கரி ஊழியர்கள். பலரது அனுபவங்களும் இதுபோலத் தான் இருக்கிறது.

First published:

Tags: Swiggy, Trending