• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கால்பந்து விளையாட்டில் வலியால் துடித்த சக வீரர்... கோல் அடிக்கும் நேரத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் - வைரல் வீடியோ

கால்பந்து விளையாட்டில் வலியால் துடித்த சக வீரர்... கோல் அடிக்கும் நேரத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் - வைரல் வீடியோ

கோல் அடிக்கும் நேரத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்

கோல் அடிக்கும் நேரத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்

Viral Video : விளையாட்டில் வெற்றி என்பதை விட நேர்மையும், சக ஆட்டக்காரரை மதிக்கும் குணமும் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    விளையாட்டிலும் நேர்மை வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டு விலங்குகள், பறவைகள், காடுகளில் நடக்கும் சுவாரசிய சம்பவங்கள் என வீடியோக்களை வெளியிட்டு வருவார். தற்போது வித்யாசமாக மைதானத்தில் நடைபெற்ற அழகான நிகழ்வு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில்,

    கால்பந்து விளையாட்டில் இரு அணியினரும் போட்டி போட்டு முட்டி மோதி முன்னேறிக் கொண்டு இருக்கையில் எதிர் அணியில் இருந்து பந்தினை எடுத்துக்கொண்டு கோல் போஸ்ட் நோக்கி முன்னேறி வரும் வீரருக்கு திடீரென காலில் வலி ஏற்பட உடனே தனது கால்களை நொண்டியவாறு ஆட்டத்தை தொடர முடியாமல் திணறுகின்றார்.

    பின்னர் வரும் ஆட்டக்காரர் பந்தினை எடுத்துக்கொண்டு கோல் அடிக்க முற்படுகையில் ஒரு ட்விஸ்ட் ஏற்படுகின்றது. ஆட்டத்தில் சக போட்டியாளன் ஒருவன் செயலிழந்து நிற்கையில் வெற்றியை எதிர் பார்க்காமல் பந்தினை கோல் அடிக்காமல் போஸ்டிற்கு வெளியில் தள்ளி விட்டு விட்டு மனம் நொந்து போகின்றார்.

     



    பின்னர் வீரர்கள் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றனர். விளையாட்டில் வெற்றி என்பதை விட நேர்மையும், சக ஆட்டக்காரரை மதிக்கும் குணமும் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: