முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தட் கரடியே காரி துப்பிய மொமெண்ட்... ட்ராபிக் சிக்னலில் நிற்க கத்துக்கோங்க...!

தட் கரடியே காரி துப்பிய மொமெண்ட்... ட்ராபிக் சிக்னலில் நிற்க கத்துக்கோங்க...!

சாலையை கடக்கும் கரடி

சாலையை கடக்கும் கரடி

  • 1-MIN READ
  • Last Updated :

சாலை விதிகளை மதித்து நடப்பதை நாம் விலங்குகளிடம் இருந்தே கற்க வேண்டும். நம் மக்களில் பெரும்பாலானோர் இதனை கடைபிடிப்பதில்லை.

இதற்கு எடுத்துக்காட்டாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகும் நாய்களின் வீடியோக்களை காணலாம். டிராஃபிக் சிக்னல்களில் நாய்கள் நில் ! கவனி! செல்! என்ற வாசகத்தை சரியாக கடைபிடிப்பதை நாம் காண முடியும்.

சமீபத்தில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை மத்திய கைலாஷ் , ராஜீவ் காந்தி சாலையில் தெரு நாய் ஒன்று மிக பொறுமையுடன் ட்ராபிக் சிக்னலில் நின்று கவனத்துடன் சாலையின் இரண்டு பக்கங்களை பார்த்து கடந்து சென்ற வீடியோ இணையம் முழுக்க வைரலானது.

நாய்க்கு வேலையில்லை ஆனா நிக்க நேரமில்லை எனும் பழமொழியை உடைத்தெறிந்தார் போல் இருந்தது அந்த வீடியோ.

எனினும் நாய்கள் மட்டுமே கடைபிடித்து வந்த சாலை விதிமுறைகளை தற்போது கரடிகளும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டன. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கரடி ஒன்று சாலையை கடப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு கரடிகள் சாலை விதிகளை மதிக்க கற்றுக் கொண்டது என பதிவிட்டுள்ளார்.

சுசந்தா நந்தா தனது டுவிட்டரில் வெளியிடும் வன உயிரினங்களில் வீடியோக்களை காணவே அவரை ட்விட்டரில் பலரும் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கரடியின் வீடியோ நெட்டிசன்களின் கவனம் பெற்றதுள்ளது.

Also see...

First published:

Tags: Traffic Rules