நீர் நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து வருவதை அன்னப்பறவை ஒன்று அகற்றி சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிளாஸ்டிக் இல்லா உலகை உருவாகும் நோக்கில் அன்னப்பறவை மனிதர்களுக்கு உதவி செய்வதாக பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
மனிதர்கள் பயன்படுத்தும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்திக் பைகள் நீர் நிலைகளில் மிதந்து வருவதால் அதில் வாழும் உயிரினங்கள் பெரிதளவில் பாதிப்பிற்குள்ளாகின்றது. அதன் சந்ததிகள் அழியும் நிலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
தற்போது இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் நோக்கில் அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதே போன்று மற்றுமொரு வீடியோ ஓன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பொறுப்புணர்வு அனைத்து மனிதர்களுக்கும் வரவேண்டும் என பலரும் கமெண்ட்ஸ்சில் பதிவிட்டு வருகின்றனர்.
சுகாதார சீர்கேடுகளில் இருந்து தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு அரசால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு மாற்றாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/ மரப்பொருட்கள், காகிதக் குழல்கள், துணி/காகிதம்/ சணல் பைகள், காகிக/ துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள்,மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ALSO READ | பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக தயாராகும் "மஞ்சப் பை" - மகிழ்ச்சியில் திருப்பூர் தொழிலாளர்கள்
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இந்த உத்தரவு இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், 75 மைக்ரானுக்கு அதிகமுள்ள பிளாஸ்டிக் பைகளை வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், டிசம்பர் 31ம் தேதி முதல் 120 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவித்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.