• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அடிக்கிற வெயிலுக்கு எனக்கு வேற வழி தெரியல...தண்ணீர் தொட்டிக்குள் குளித்து மகிழும் யானைக் குட்டி (வீடியோ)

அடிக்கிற வெயிலுக்கு எனக்கு வேற வழி தெரியல...தண்ணீர் தொட்டிக்குள் குளித்து மகிழும் யானைக் குட்டி (வீடியோ)

யானைக் குட்டி

யானைக் குட்டி

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பலரும் ஆறு, குளம், அருவி என ஓடிக்கொண்டிருக்க இங்கு யானை ஒன்று சிறிய டப்புக்குள் இருக்கும் இடத்தில் இருந்தே தண்ணீரில் மகிழ்ந்து விளையாடும் வீடியோ பலரின் கவனம் பெற்று வைரலாகி வருகின்றது.

  • Share this:
    கோடை வெயிலுக்கு இதமாக யானைக் குட்டி ஒன்று, தண்ணீர் தொட்டியில் உற்சாகமாக குளித்து விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதுதொடர்பான வீடியோவில், வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்த யானைக் குட்டி, அதில் முழுமையாக படுத்து தனது உடலை நனைத்துள்ளது. தொடர்ந்து, வெளியே வர மறுத்து, அந்த சிறு தொட்டிக்குள்ளேயே புரண்டு, புரண்டு படுத்து விளையாடி மகிழ்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

     

     



     

    இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் ஆப்பிரிக்க யானைகள் மணல் குவியலில் படுத்து உருண்டு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்“யானைகள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போடுவதால் பூச்சி கடியிலிருந்து தப்பிக்க முடியும்.

     

     



     

    யானையின் தோல்களில் மணல் துகள் இருப்பதால் வண்டு உள்ளிட்ட பூச்சிகள் அவற்றை கடிக்க முடியாது. மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் யானைகள் இது போன்று செய்கிறது“ என்று குறிப்பிட்டிருந்தார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: