ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாஸ்போர்ட் குறித்த பலரும் அறிந்திராத விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

பாஸ்போர்ட் குறித்த பலரும் அறிந்திராத விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Passport | 15ஆம் நூற்றாண்டில் தான் பாஸ்போர்ட் என்ற வார்த்தை உருவானதாக தெரிகிறது. அப்போது பாஸர் (வழிபோக்கர்) + போர்ட் (துறைமுகத்தை கடக்க இருப்பவர்) என்ற கூட்டுச் சொற்கள் சேர்ந்த பாஸ்போர்ட் என்றானதாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வோர் மட்டுமே வெளிநாடு பயணிப்பார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் கல்வி, சுற்றுலா, வியாபாரம் என பல, பல தேவைகளுக்காக பலரும் வெளிநாடு செல்கின்றனர். ஆகவே, நம்மில் எல்லோரது கையிலும் பாஸ்போர்ட் கட்டாயமாக இருக்கும். விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே இருக்கலாம்.

இதுவரையிலும் நாம் வெளிநாடுகளுக்கு செல்லாவிட்டாலும் கூட, என்றாவது ஒருநாள் பயன்படும் என்ற எண்ணத்தில் பாஸ்போர்ட் வைத்திருப்போம். பாஸ்போர்ட் இல்லாமல் சர்வதேச எல்லைகளை கடப்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஒரு நாட்டுக்குள் உள்நுழையவும், வெளியேறவும் உங்களுக்கான அடையாள ஆவணமாக பாஸ்போர்ட் இருக்கிறது. மேலும், பாஸ்போர் வைத்திருப்பவர் எங்கிருந்து வருகிறார், எங்கு சென்றார் என்ற தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.

பாஸ்போர்ட் குறித்த பலரும் அறிந்திராத விசித்திரமான உண்மைகள்..

பாஸ்போர்ட் என்ற வார்த்தை பைபிளில் இருந்து உருவானதாக வரலாறு ஒன்று கூறுகிறது. ஆனால், கிறிஸ்துவுக்கு முன்பும் இந்த வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 450 பி.சி. காலத்தில் பெர்சியாவில் ஆட்சி செய்த மன்னர் ஒருவர், அவரது அரசவையில் பணியாற்றிய அதிகாரிகள், நாட்டின் எல்லையில் உள்ள ஆற்றைக் கடந்து செல்வதற்கு ஒரு அனுமதிச்சீட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

இருப்பினும், 15ஆம் நூற்றாண்டில் தான் பாஸ்போர்ட் என்ற வார்த்தை உருவானதாக தெரிகிறது. அப்போது பாஸர் (வழிபோக்கர்) + போர்ட் (துறைமுகத்தை கடக்க இருப்பவர்) என்ற கூட்டுச் சொற்கள் சேர்ந்த பாஸ்போர்ட் என்றானதாம்.

Also Read : இரு கைகளையும் பயன்படுத்தும் திறன் இருந்தால் என்ன நன்மை

பேஸ் டாட்டூ, சர்ஜரி கூடாது..

பாஸ்போர்ட் எடுத்த பிறகு முகத்தில் டாட்டூ வரையக் கூடாது. அதேபோன்று, எதிர்பாரத விதமாக முகத்தில் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டாலும் சிக்கல் தான். அதற்குப் பிறகு நீங்கள் புதிய பாஸ்போர்ட் எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் முகம் மாறியிருக்கும் என்பதால் புதிய முகத்தை அப்டேட் செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Also Read : ஒரே நாள் இரவில் 20 ஆண்டுகால நினைவுகளை மறந்த பெண்

யூனிபார்ஃம் அணிந்து பாஸ்போர்ட் எடுக்க முடியாது..

பாஸ்போர்ட் போட்டோ எடுக்கும்போது நீங்கள் எந்தவொரு யூனிபார்ஃம் அணியவும் அனுமதி கிடையாது. தொப்பி, கூலிங் கிளாஸ் போன்றவை அனுமதிக்கப்படாது. உங்கள் முடி உங்கள் முகத்தை மறைத்தால் கூட மீண்டும் ஃபோட்டோ எடுக்க வேண்டும். முகம் தெளிவாக தெரிய வேண்டும்.

காலவதியாக 6 மாதத்திற்கு முன்பாக புதுப்பிக்கவும்..

காலாவதியாக இருக்கும் பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு பயணம் செய்யாதீர்கள். சில நாடுகளுக்குள் நீங்கள் உள்நுழையும்போது குறைந்தபட்சம் 3 மாத வேலிடிட்டி இருக்க வேண்டும். ஆகவே காலாவதியாக 6 மாதம் இருக்கையில் புதுப்பிப்பது பாதுகாப்பானது.

Also Read : குடிநீருக்காக மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் செலவு செய்யும் பிரபலம்!

கலர் கலரா பாஸ்போர்ட்..

பொதுவாக ரெட், ப்ளூ, கிரீன் அல்லது பிளாக் ஆகிய வண்ணங்களில் பாஸ்போர்ட் இருக்கும். அந்தந்த நாடுகளில் பின்பற்றப்படும் அரசியல் அல்லது மதம் சார்ந்த கொள்கைகளுக்கு தகுந்தாற்போல இந்த வண்ணம் மாறுபடுகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Passport