Video | சாலையில் எச்சில் துப்பியவருக்கு அபராதம்... பணம் இல்லை என்றதால் நூதன தண்டனை!

news18
Updated: August 30, 2019, 10:55 AM IST
Video | சாலையில் எச்சில் துப்பியவருக்கு அபராதம்... பணம் இல்லை என்றதால் நூதன தண்டனை!
தண்டிக்கப்பட்ட நபர்
news18
Updated: August 30, 2019, 10:55 AM IST
சாலையில் எச்சில் துப்பியதற்கு நகராட்சி அதிகாரிகள் அபாராதம் விதித்த நிலையில், துப்பிய நபரிடம் பணம் இல்லாததால் விநோத தண்டனையை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகராட்சியானது சாலையில் அசுத்தம் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சமீபத்தில் கொண்டு வந்தது. பொதுவெளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் சாலையில் சிறுநீர் கழிப்பவர்கள், எச்சில் துப்புபவர்கள் ஆகியோரை கண்டறிந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சாலையில் எச்சில் துப்பிய நபரை, அதிகாரிகள் சாலையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் நடந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில், அத்வாலினிஸ் நகரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் சென்ற நபர் சாலையில் எச்சில் துப்பியபடி சென்றுள்ளார்.


அவரை வளைத்துப் பிடித்த அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை அபாராதம் கட்ட முடியாது என்று கூறியதால், தோப்புகரணம் போட விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...