நம்மில் பலரும் வீட்டின் அருகே இருக்கும் மளிகை கடைகளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வோம். ஆனால் ஒரு சிலர் சூப்பர் மார்க்கெட்டில் மட்டுமே வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.
அதற்கு முக்கிய காரணம் பொருட்களின் மீது அங்கு வழங்கப்படும் பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் தான். ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கும் போது வழக்கமான தள்ளுபடியைப் பெற, சூப்பர் மார்க்கெட் ரிவார்ட் கார்ட்ஸ் எப்போதுமே பயனுள்ளதாக இருக்கும். எனினும் பணம் செலுத்தும் இடத்தில் அல்லது செல்ஃப் -செக்-அவுட் கவுன்ட்டரில் இந்த ரிவார்ட் கார்டுகளை ப்ரொடியூஸ் செய்ய தவறிவிட்டால் மலிவு விலை உள்ளிட்ட சலுகைகளை இழக்க நேரிடும்.
ஒரு வாடிக்கையாளர் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்து உள்ளார். எக்காரணம் கொண்டும் சலுகைகளை இழந்து விட கூடாது என்பதற்காக ஒரு சூப்பர் மார்க்கெட்டின் ரெகுலர் கஸ்டமர் வித்தியாசமான ஐடியா ஒன்றை கையாண்டு வருகிறார். Woolworths சூப்பர் மார்க்கெட்டின் ரிவர்ட்ஸ் கார்ட் பார்கோடை அதன் ரெகுலர் கஸ்டமர் ஒருவர் தனது கையில் டாட்டூ குத்தி கொண்டு உள்ளார்.
வூல்வொர்த்ஸ் (Woolworths) என்பது வூல்வொர்த்ஸ் குரூப்பிற்கு சொந்தமான ஒரு ஆஸ்திரேலியன் செயின் சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடை ஆகும். தனது வூல்வொர்த்ஸ் ரிவார்டு கார்ட் பார்கோடை கையில் டாட்டூ குத்தியுள்ள வாடிக்கையாளரின் வீடியோ ஒன்று டிக்டாக் உள்ளிட்ட பல சோஷியல் மீடியாக்களில் உலகளவில் வைரலாகியுள்ளது.
டிக்டாக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ள ஒரு வீடியோ கிளிப்பில், ரால்ப் ரிவேரா (Ralph Rivera) என்ற அந்த நபர் தனது டாட்டூவை செல்ஃப் -செக்-அவுட் கவுன்ட்டரில் ஸ்கேன் செய்வதைக் காட்டுகிறது. அவர் தனது ஷாப்பிங் பாயின்டஸ்களை ரிஜிஸ்டர்ட் செய்வதற்காக தனது இடது கையால் சென்சார் மீது சாய்ந்தபடி அந்த வீடியோவில் காணப்படுகிறார்.
Also Read : அகதியாக வந்த குடும்பத்திற்கு நினைத்த பார்க்கமுடியாத உதவியை செய்த நபர்
அவர் தனது டாட்டூ பார்கோடை ஸ்கேன் செய்தவுடன் அங்கிருக்கும் சிஸ்டம் "உங்கள் தினசரி ரிவார்ட்ஸ் கார்ட் சேர்க்கப்பட்டது" (Your Everyday Rewards Card has been added) கூறுகிறது. இதன் மூலம் அவரது இந்த டாட்டூ ஐடியா சிறப்பாக ஒர்கவுட் ஆகி உள்ளது. இந்த டாட்டூ ஐடியா பலரையும் கவர்ந்தது. எனினும் எதிர்காலத்தில் Woolworths அதன் ரிவார்ட்ஸ் கோட், QR கோட் அல்லது பார் கோட் ஆகியவற்றை மாற்றினால் இது வேலை செய்யாதே என்று பலரும் கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.
Also Read : சிறுமியாக தூங்கியவர் இளம்பெண்ணாக எழுந்த சம்பவம் - ஆச்சரியமூட்டும் விசித்திர கதை.!
ஒரு சில யூஸர்கள் ரால்ப் ரிவேராவின் இந்த ஐடியாவை அல்டிமேட் டைம் சேவர் என்று குறிப்பிட்டு உள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு, இத்தாலியில் 22 வயதான மாணவர் ஒருவர் தனது கோவிட் சான்றிதழின் பார்கோடை தனது கையில் பச்சை குத்தி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.