இது வேற லெவல் 'பாட்டில் கேப் சேலஞ்ச்'!

ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கோலிவுட் நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பாட்டில் கேப் சேலஞ்சை செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்

Prabhu Venkat | news18
Updated: July 5, 2019, 4:28 PM IST
இது வேற லெவல் 'பாட்டில் கேப் சேலஞ்ச்'!
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கோலிவுட் நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பாட்டில் கேப் சேலஞ்சை செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்
Prabhu Venkat | news18
Updated: July 5, 2019, 4:28 PM IST
பாட்டில் கேப் சேலஞ்சை ஏற்று பலரும் சமூக வலைதளங்களில் சூப்பரான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக 10 இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் டிரெண்டானது.

தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ஒருவர் பாட்டிலைப் பிடித்திருக்க மற்றொருவர் கால்களால் உதைத்து அந்த பாட்டில் மூடியைக் கழற்ற வேண்டும் இதுதான் பாட்டில் கேப் சேலஞ்ச். ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கோலிவுட் நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதை வெற்றிகரமாக செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Loading...

சிலர் இதில் சொதப்பி கிழே விழுகின்றனர், பாட்டில்களை உடைத்து விடுகின்றனர், அல்லது எதிரே இருப்பவரை காயப்படுத்தி விடுகின்றனர். ஆனாலும் அந்த வீடியோவை தவறாமல் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து லைக்ஸ்களையும் அள்ளி விடுகின்றனர்.தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளனர். காரில் வந்து பாட்டில் மூடியை திறப்பது போன்ற பலஅட்டகாசமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...