Home /News /trend /

சூப்பர் மரியோ வீடியோ கேமில் இப்புடி ஒரு விஷயம் இருக்கா! இவ்வளோ நாள் இது தெரியாமா போச்சோ

சூப்பர் மரியோ வீடியோ கேமில் இப்புடி ஒரு விஷயம் இருக்கா! இவ்வளோ நாள் இது தெரியாமா போச்சோ

Super Mario

Super Mario

Super Mario | சூப்பர் மரியோ உளவியலில் ஒரு முக்கிய பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது, எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

கேம் என்றாலே நாம் அனைவரும் விரும்புவதுதானே... நீங்கள் 90ஸ் கிட்ஸ் -ஆக இருந்தாலும் சரி தற்போதுள்ள 2k கிட்ஸ்-ஆக இருந்தாலும் சரி , சூப்பர் மரியோ பிரதர்ஸ் என்ற பெயரை நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சூப்பர் மரியோ உளவியலில் ஒரு முக்கிய பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது, எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். இந்த கேம் ஜப்பானைச் சேர்ந்த வீடியோ கேம் நிறுவனமான நிண்டெண்டோவால் உருவாக்கப்பட்டதாகும். இன்றைய கேமிங் துறையில் அதிக அளவில் விளையாடப்படும் கேம்களில் இதுவும் ஒன்றாகும். அழகான இளவரசியை மீட்கும் வண்ணமயமான mushroom kingdom-ல் பல்வேறு சவாலான இலக்குகள் இதில் உள்ளன.

இதுவே இவ்விளையாட்டின் சுவாரஸ்யத்தை தூண்டுகிறது. மரியோவை ஒரு அற்புதமான பொழுதுபோக்கு விளையாட்டு என்றே நாம் சொல்லலாம். இது வெறும் பொழுது போக்கு விளையாட்டாக மட்டுமின்றி குழந்தைகளுக்கு சில முக்கியமான திறன்களையும் கற்றும் கொடுக்கிறது.

இந்த கேம் பற்றி ஒரு பயனர் தனது twitter பக்கத்தில் ,கேமில் இருந்து ஸ்க்ரீன் கிராப்கள்(screen grabs) போல் இருக்கும் இரண்டு இமேஜ்களை (image) பகிர்ந்துள்ளார். முதல் படத்தில், மரியோ கேமில் கற்களாலால் ஆன தடைகளை கடந்து செல்கிறார். அந்த ஒவ்வொரு தடையும் செங்குத்தாகவும், மேலே செல்ல செல்ல முன் உள்ள தடையைவிட உயரமாகவும் ஒன்றின் பின் ஒன்றாகவும் அமைக்கப்பட்டிருந்தது.



மற்றொரு படம் வேறொரு வடிவில் தடையைக் காட்டுகிறது, இதில், செங்குத்துத் தடைகளுக்குப் பதிலாக, காற்றில் மிதக்கும் கற்களால் ஆன தடைகள் காணப்படுகிறது. "மரியோ கேம்ஸ் நமக்குக் கற்பிப்பது என்னவென்றால் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கும் அனைத்தும் , உளவியல் ரீதியாக முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பதாகும். இந்த கேம் மூலம் நாம் இதை புரிந்து கொள்ளலாம்" என்றும் அந்த யூஸர் எழுதியிருந்தார்.

Also Read : இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது.? உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்!

2 தடைகளுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், மேலே உள்ள கற்களால் ஆன தடைகளின் மாறுபாடு மட்டுமே. இரண்டாவது தடையை விட, முதல் தடையே மிகவும் கடினமானதாக உள்ளது. சோஷியல் மீடியா யூஸர்களில் ஒருவர், நான் இனி எல்லா விளையாட்டுகளையும் ஒரே மாதிரியாக பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.



மற்றொருவர், இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்தால் நான் ஏன் மிகவும் ஈர்க்கப்படுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ கேம் பற்றி பேச நினைத்தும் எனக்கு என்ன பேசுவதென்றும், இது கூறும் அர்த்தத்தையும் என்னால் விளக்க முடியவில்லை என்றும் ஒரு யூஸர் கூறியுள்ளார்.

Also Read : ராணுவ வீரரின் கால்களை தொட்டு வணங்கிய சிறுமி - இதயத்தை கொள்ளையடிக்கும் வீடியோ

இது அருமை, என்றும் மற்றொருவர் எழுதியுள்ளார்.மரியோ கேம்களில் ஏதோ ஒரு விஷயம் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருந்தாலும், உளவியல் ரீதியாக அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த விளையாட்டு வாழ்க்கையில் சில உண்மையான விஷயங்களை பற்றிய உணர்வை உருவாக்குகிறது. மேலும் தோல்விகளை பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தையே மக்கள் கொண்டிருக்க வேண்டும்.



இந்த கோட்பாட்டைத்தான் இந்த மரியோ கேம்கள் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. இது முன்னாள் நாசா பொறியாளர் மார்க் ராபர் என்பவரால் உருவாக்கப்பட்டது. நாம் பல வகையான கேம்களை விளையாடுகிறோம், ஆனால் அதற்கு அடிமையாகி விடாமல் அதிலிருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Psychology, Trending, Video Game

அடுத்த செய்தி