முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / அதிசய காட்சி..கண்களில் இருந்து பாயும் ஒளி... இணையத்தை கலக்கும் ‘லேசர் கேட்’ வீடியோ!

அதிசய காட்சி..கண்களில் இருந்து பாயும் ஒளி... இணையத்தை கலக்கும் ‘லேசர் கேட்’ வீடியோ!

வைரலாகும் பூனை வீடியோ

வைரலாகும் பூனை வீடியோ

Lazer Cat Viral Video | சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து பலரும் இந்த பூனைக்குட்டிக்கு ‘லேசர் கேட்’ என செல்லப்பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூப்பர் மேனைப் போல கண்களில் இருந்து லேசரை பாய்ச்சும் பூனைக்குட்டியின் சுட்டித்தனமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹீரோ  படங்களில் ‘சூப்பர் மேன்’ கண்களில் இருந்தும், ‘விஷன்’ நெற்றில் இருந்தும், ‘அயர்ன்மேன்’ கையில் இருந்தும் லேசர் பாய்ந்து வந்து எதிரைகளை பஸ்பமாக்கும் காட்சிகளை பார்த்திருப்போம். ஏன், தோர் உடைய சுத்தியில் இருந்து கூட மின்னல் சக்தி பாய்ந்து வந்து பல நூறு பேரை ஒரே சமயத்தில் பறக்கவிட்ட காட்சிகள் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த சூப்பர் ஹீரோக்களை விட சூப்பர் கேட் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

Read More : கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை.. இணையத்தை வென்ற வீடியோ!

பூனைக்குட்டிகள் எப்போதுமே மனிதர்களின் நெருக்கிய நண்பர்களாக வலம் வருகிறது. பார்க்க அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு இவைகள் செய்யும் சேட்டைகள் ஏராளம். எனவே தான் பூனைக்குட்டிகள் பற்றிய க்யூட் வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. பார்க்க பஞ்சு போல பூசுபூசுவென இருந்தாலும், கோவம் வந்துவிட்டால் பூனைகளை அடக்க முடியாது, அப்படி கோவத்திலும், குறும்புத்தனமாக பூனைகள் செய்யும் சேட்டை வீடியோக்களை ரசிக்க எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் வீடியோவில் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒரு சூப்பர் கேட் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம். அந்த வீடியோவில் பூனை ஒன்று மேஜை மீது அமர்ந்து கொண்டு அங்கும், இங்கும் பார்த்துக் கொண்டுக்கிறது. அப்போது அதன் கண்களில் இருந்து லேசர் போன்ற பிரகாசமான ஒளி வெளிப்படுகிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து பலரும் இந்த பூனைக்குட்டிக்கு ‘லேசர் கேட்’ என செல்லப்பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். பலரும் இது என்ன அற்புதம் பூனைக்குட்டியின் கண்களில் இருந்து எப்படி லேசர் வருகிறது?, இது கடவுளின் விந்தையா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பூனைக்குட்டியின் கண்களில் இருந்து பாயும் ஒளிக்குப் பின்னால் கடவுளின் அற்புதம் எதுவும் இல்லை, ஹைடெக் தொழில்நுட்பம் தான் மறைந்துள்ளது. ஜெனிவீடியோ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வெறும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பூனைக்குட்டி மேஜை மீது அமர்ந்து அங்கும், இங்கும் பார்ப்பது மட்டுமே உண்மையான காட்சிகள், அதற்கு பிறகு கண்களில் இருந்து லேசர் பாய்வது போல் விஎஃப்எக்ஸ் செய்த வீடியோவை தான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

பலர் இது வெறும் விஎஃப்எக்ஸ் என்று சொன்னாலும், மற்றவர்கள் பூனையிடம் அதிசயமான திறன்களைக் கொண்ட ஒருவித மர்மம் மறைந்திருப்பதாக நம்புவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாய் அளவிற்கு பெரிதாக இருந்த ரஷ்ய மைனே கூன் பூனை உலகிலேயே மிகப்பெரிய பூனை என பெயர் பெற்றதோடு, சோசியல் மீடியாவிலும் பல நாட்களுக்கு ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cat, Trending Videos, Viral Video