• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • விஸ்கிப் பிரியரான 'சுல்தான் ஜோடா' காளை உயிரிழப்பு!

விஸ்கிப் பிரியரான 'சுல்தான் ஜோடா' காளை உயிரிழப்பு!

சுல்தான் ஜோடா

சுல்தான் ஜோடா

சுல்தான் காளைக்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என்றால் அது சாராசரியாக 6 அடி உயரமும், 1.5 டன் எடையும் கொண்டது.

  • Share this:
ஒரு காலத்தில் ரூ. 21 கோடி வரை விலைபோன , ஹரியானாவின் புகழ்பெற்ற காளையான 'சுல்தான் ஜோடா' அண்மையில் இறந்தது. இந்த சுல்தான் காளைக்கு விஸ்கி குடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். மேலும் இது ஒருநாளில் லிட்டர் கணக்கான பால், கிலோக்கணக்கான ஆப்பிள்கள், கேரட்டுகள் போன்றவற்றை உண்ணும் பழக்கம் உடையது. தொடர்ந்து இந்த சுல்தான் காளை, இந்தியா முழுவதிலும் உள்ள பல விவசாய கண்காட்சிகளில் பங்கேற்று பலவிதமான பரிசுகளை பெற்றுள்ளது. அதேபோல இதன் தோற்றம், உடலமைப்பு மற்றும் தனித்திறன்களுக்காக பலவித போட்டிகளிலும் வென்றுள்ளது.

சுல்தான் காளையின் தனிச்சிறப்புகளை எல்லாம் கேள்விப்பட்டு, தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கால்நடை விவசாயி, இதன் உரிமையாளர் நரேஷ் பெனிவாலுக்கு ரூ. 21 கோடி கொடுத்து காளையை வாங்க முற்பட்டுள்ளார். ஆனால் காளையுடன் கொண்ட பாசப்பிணைப்பு காரணமாக, இதன் உரிமையாளர் நரேஷ் விற்க மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடெங்கும் உள்ள விவசாயிகளின் மத்தியில், இனப்பெருக்கம் செய்யும் திறனுக்காக சுல்தான் காளை புகழ்பெற்றது. இதனால் ஒருமுறை ஒரு விவசாய கண்காட்சியில், இந்த காளை ரூ. 21 கோடி வரை ஏலம் கூறப்பட்டாலும், நரேஷ் தனது விலைமதிப்பற்ற காளையை விற்பனை செய்ய மறுத்து விட்டார். இதனால் பெரும் பணக்காரராகும் வாய்ப்பையும் இழந்தார்.

சுல்தான் காளை அதன் உரிமையாரான நரேஷ் பெனிவாலுடன் ஹரியானாவின் கைதல் மாவட்டத்தில் வசித்து வந்தது. இது தனது 14வருட முழுமையான வாழ்க்கைக்குப் பிறகு, மாரடைப்பால் அண்மையில் இறந்தது. இதையடுத்து நண்பனைப் போல பழகி, திடீரென தன்னை விட்டுப் பிரிந்த காளையால், அதன் உரிமையாளர் நரேஷ் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

பெரும்பாலும் இந்தியாவில் கால்நடைகள், குடும்பத்தின் ஒரு அங்கத்தினராகவே கருதிப் போற்றப்படும். இதற்கு பெறும் சிறப்புகளை உடைய சுல்தான் காளை மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால் நிச்சயம் சுல்தானின் பிரிவு, அதன் உரிமையாளர் நரேஷ் உள்ளத்தில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்கியிருக்கும்.

சுல்தான் காளைக்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என்றால் அது சாராசரியாக 6 அடி உயரமும், 1.5 டன் எடையும் கொண்டது. இது ஒருமுறை 6 மி.லி என வீரியமிக்க விந்தை வெளியேற்றுவதால் , தனது இனப்பெருக்க திறன்களுக்காக புகழ்பெற்றது. இதன் ஒரு விந்து வெளியேற்றத்திலிருந்து 600 டோஸ்கள் என்ற எண்ணிக்கையில் இனப்பெருக்க ஊசிகள் தயாரிக்கப்படுகின்றன. இப்படி சுல்தான் காளையின் விந்து மூலம் தயாரிக்கப்பட்ட, ஒரு இனப்பெருக்க ஊசியின் விலை ரூ. 250 ஆகும்.

இதுபோல ஆண்டுதோறும் சுல்தானின் விந்துவிலிருந்து சுமார் 54,000 டோஸ் இனப்பெருக்க ஊசிகள் தயாரிக்கப்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆக மொத்தம் ஒரு ஆண்டில் சுல்தானின் விந்து மட்டும் ரூ.1,35,00,000 வருமானத்தை ஈட்டித் தருகிறது.

ஒருமுறை சுல்தானின் உரிமையாளர் நரேஷ் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு தான் கொடுத்த பேட்டியில், "சுல்தானின் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் தடுப்பூசி ஆகியவைகளுக்காக ஆண்டுதோறும் சுமார் 200,000 வரை செலவழிக்கிறோம்.இந்த காளைக்கு கால்நடை தீவனம் மற்றும் பால் நிறையத் தேவை.மேலும் அது ஆரோக்கியமாக இருக்க, ஒருநாளைக்கு மூன்று முறையாவது அதனை குளிக்க வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Also read... மணமக்களை பின்னுக்கு தள்ளி கியூட்டாக போஸ் கொடுத்த ‘நாய்’- வைரலாகும் புகைப்படம்!

வீரியமிக்க இனப்பெருக்க திறன்களுக்கு பெயர் பெற்ற சுல்தான், வேறு ஒரு வித்தியாசமான பழக்கத்தாலும் டிவி, பத்திரிக்கை, இன்டர்நெட் ஆகிய ஊடகங்களில் தொடர்ந்து உலா வந்து கொண்டிருந்தது. அது அதன் விஸ்கி குடிக்கும் பழக்கம்தான். தினசரி உறங்கப் போவதற்கு முன்பு சுல்தான் விஸ்கி குடிக்கும் வீடியோ, பலமுறை இன்டர்நெட்டில் வைரலானது.

இதனால் இந்த காளைக்கு எப்படி விஸ்கி குடிக்கும் பழக்கம் வந்தது என பலர் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் சிலர் விஸ்கியினால் காளை ஆரோக்கியமடைவதையும் கண்டனர்.இப்படி பலவித திறன்களை கொண்ட சுல்தான் காளைக்கு, அனைத்து சத்துகளும் நிறைந்த சமச்சீரான சரிவிகித உணவே தரப்பட்டது. சுல்தானின் தினசரி உணவுப் பழக்கத்தில் சுமார் 15 கிலோ ஆப்பிள்கள், 10 கிலோ தானியங்கள் மற்றும் 10-12 கிலோ இலை காய்கறிகள் ஆகியவை அடங்கியிருக்கும் என செய்திகள் சொல்கிறது. இப்படி சுல்தான் காளையின் ஒருநாள் உணவுக்காக மட்டும் அதன் உரிமையாளர் தினசரி ரூ.2,000 வரை செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: