தேர்வில் பூஜ்ஜியம் வாங்கிய பெண்ணுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு..!

இந்த மாணவியின் பதிவுக்கு 57 ஆயிரம் லைக்குகள், 10 ஆயிரம் ரீட்வீட்கள் என சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தேர்வில் பூஜ்ஜியம் வாங்கிய பெண்ணுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு..!
சுந்தர் பிச்சை
  • News18
  • Last Updated: November 22, 2019, 5:27 PM IST
  • Share this:
சமூகவலைதளத்தில் சாதாரணமாக மாணவி ஒருவர் தான் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கியதைப் பதிவிட அதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் இருந்து எதிர்பாராத பாராட்டு கிடைத்துள்ளது.

சாராஃபினா நான்ஸ் என்ற பெண் அவரது இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதாகவும் அதற்குப் பின்னர் தனது துறையை மாற்றி ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். “தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்றும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.

மாணவியின் இந்த ட்விட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, “சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது” எனப் பாராட்டியுள்ளார். இந்த மாணவியின் பதிவுக்கு 57 ஆயிரம் லைக்குகள், 10 ஆயிரம் ரீட்வீட்கள் என சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பார்க்க: 120 ஆண்டுகளுக்குப் பின் டைம்-ட்ராவல் செய்து மீண்டும் வந்துள்ள க்ரெட்டா தன்பெர்க்..?
First published: November 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்