சூரியனின் செயல்பாட்டில் புதிய மாற்றம்! பூமிக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

1815ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, இந்தோனேஷியாவில் மவுண்ட் தம்போரா என்ற எரிமலையில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

சூரியனின் செயல்பாட்டில் புதிய மாற்றம்! பூமிக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
மாதிரி படம்
  • Share this:
மனித இனத்தின் இருப்பிற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழும் ஒரு மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது. 

கொரோனா வைரசிலிருந்து தற்காத்துக்கொள்ள, உலகில் அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்ட சமயத்தில், சூரியனும் தனது செயல்பாட்டை குறிப்பிட்ட அளவு குறைத்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2004ஆம் ஆண்டு வெளியான The day after tomorrow திரைப் படத்தில், உலகமே பனியால் உறைந்துபோவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக்கொள்வதாலேயே உலகம் உறைந்துபோவதாக படத்தில் காண்பித்திருப்பார்கள். அந்த படத்தில் குறிப்பிட்ட கற்பனையான நிகழ்வு தற்போது உண்மையில் நடந்துள்ளது.


பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரியனில் அணுக்கருச் சிதைவு வினை சங்கிலித்தொடராக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், உருவாகும் அபரிமிதமான ஆற்றல் பூமிக்கு வெப்பத்தை அளித்து வருகிறது. தற்போது சூரியனின் செயல்பாடு குறைந்துள்ளதால், பூமியின் வெப்பநிலையும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன் 1790க்கும் 1830க்கும் இடைபட்ட காலத்தில், இதேபோல் சூரியன் தனது உக்கிரத்தை குறைத்துக்கொண்டது. அந்த சமயம், ஐரோப்பா மிகப்பெரிய காலநிலை மாற்றத்தை சந்தித்தது. லண்டனில் தேம்ஸ் நதி முதல்முறையாக முழுவதும் உறைந்துபோனது. வெய்யில் காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்தது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய பஞ்சமும் அதன் தொடர்ச்சியாக தொற்று நோயும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

1815ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, இந்தோனேஷியாவில் மவுண்ட் தம்போரா என்ற எரிமலையில் அதுவரை உலகம் காணாத அளவில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் 71 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். சூரியனின் செயல்பாடு குறைந்ததும், அதைத்தொடர்ந்து பூமியில் வெப்பநிலை குறைந்ததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.உலகத்தை உறையச் செய்த இந்த காலத்தை, பூமி பந்தின் உருவாக்கத்தின் போது நீடித்திருந்த பெரும் பனிக்காலத்தின் சிறிய வடிவமாகவே விஞ்ஞானிகள் பார்க்கின்றனர். ஆனால், தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம் பூமியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் நடைபெறும் தொடர் நிகழ்வில், ஒவ்வொரு 11 ஆண்டுக்கும் ஒருமுறை சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக்கொள்வது வழக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம், புவியின் வெப்பநிலையை குறைக்கும் என்பது உண்மை என்றாலும், மற்றொரு பெரும் பனிக்காலத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அந்த மாற்றம் இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading