கொரோனா தொற்றுநோயால் அமெரிக்காவில் ஊரடங்கு போடப்பட்டிருந்த போது டீன் ஏஜ் சிறுமிகளின் தற்கொலை முயற்சிகள் 51 சதவீதம் உயர்ந்துள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரை, 12-17 வயதுடைய சிறுமிகளிடையே தற்கொலை முயற்சிகள் என சந்தேகிக்கப்படும் அவசர சிகிச்சை பிரிவுக்கான (ED) வருகை, கடந்த 2019ம் ஆண்டை விட 50.6 சதவீதம் அதிகம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 12 முதல் 17 வயதுடைய சிறுமிகளில், தற்கொலை முயற்சி என்ற பெயரில் பதிவான ED வருகைகள் 3.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பாலினத்தால் சந்தேகிக்கப்படும் தற்கொலை முயற்சிகளில் உள்ள வேறுபாடு மற்றும் இளைஞர்களிடையே, குறிப்பாக இளம் பருவ பெண்கள் மத்தியில் சந்தேகிக்கப்படும் தற்கொலை முயற்சிகளின் அதிகரிப்பு கடந்த கால ஆராய்ச்சிகளுடன் ஒத்துப்போவதாகவும் CDC வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து CDC கூறியதாவது, "இருப்பினும், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் தொற்றுநோய்களின் போது முந்தைய அறிக்கைகளில் அடையாளம் காணப்பட்டதை விட இளம் பெண்களிடையே மிகவும் கடுமையான
மன உளைச்சலைக் காட்டுகின்றன. இது மக்கள்தொகையில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும், தற்கொலைக்கான தடுப்பையும் வலுப்படுத்துகின்றன" என்று கூறியுள்ளது.
தற்கொலை முயற்சிகள் என சந்தேகிக்கப்படும் ED வருகைகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து உயரத் தொடங்கியது. 12-17 வயதுடைய இளம் பருவத்தினரிடையே தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான சராசரி வாராந்திர ED வருகைகள் 2020 கோடையில் 22.3 சதவீதம் அதிகமாகவும், 2021 குளிர்காலத்தில் 39.1 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.
அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் சராசரி வாராந்திர எண்ணிக்கை உயர்ந்தது. அதாவது 2020ம் ஆண்டு கோடையில் 26.2 சதவீதம் அதிகமாகவும், குளிர்காலத்தில் 50 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. அதுவே 12-17 வயதுடைய ஆண்களிடையே, தற்கொலை முயற்சிக்கான ED வருகைகள் 2019 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில் 3.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன.
Also read... Coronavirus vaccination : தடுப்பூசிக்கும் மாரடைப்பிற்கும் தொடர்பு உண்டா..? இளைஞர்களை குறிவைக்கும் மயோர்கார்டிடிஸ் நோய்க்கு தடுப்பூசிதான் காரணமா?
முக்கியமாக, இந்த அறிக்கை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பருவ வயதுப் பெண்களிடையே தற்கொலை முயற்சிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் ED வருகைகள் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தாலும், தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளன என்று அறிக்கை கூறவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து CDC வெளியிட்ட அறிக்கையில், "தற்கொலை தடுப்புக்கு ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. இது உள்கட்டமைப்பு சீர்குலைவு காலங்களில் மாற்றியமைக்கப்படுகிறது. பலதரப்பட்ட கூட்டாண்மைகளை உள்ளடக்கியது மற்றும் தற்கொலை அபாயத்தை பாதிக்கும் காரணிகளின் வரம்பை நிவர்த்தி செய்வதற்கான சான்றுகள் சார்ந்த உத்திகளை செயல்படுத்துகிறது," என்று குறிப்பிட்டுள்ளது.
தி லான்செட் மனநல மருத்துவத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா இளம் பருவத்தினரின்
மனநலத்தில், குறிப்பாக சிறுமிகளில் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கும் என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது. தொற்றுநோய்க்கு முன்பு அதே வயது கொண்ட இளம் பெண்களுடன் ஒப்பிடும்போது, எதிர்மறையான மனநல விளைவுகளை சிறுமிகள் மற்றும் இளம் பருவ பெண்கள் (13-18 வயதுடையவர்கள்) சந்தித்தாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.