முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நிஜ வாழ்க்கை ’மயக்கம் என்ன’.. மனைவியால் முன்னுக்கு வந்த தொழிலதிபர்கள் : வைரல் ட்வீட்!

நிஜ வாழ்க்கை ’மயக்கம் என்ன’.. மனைவியால் முன்னுக்கு வந்த தொழிலதிபர்கள் : வைரல் ட்வீட்!

தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள்

பெண்களின் வெற்றிக்கு ஆண்கள் தான் காரணம் என்று சொல்லது போல் தற்போது ஆண்களின் வெற்றிக்கு பெண்கள் தான் காரணம் என்று சொல்லும் வண்ணம் மனைவின் உதவியால் வெற்றி பெற்ற தொழிலதிபர்களின் கதைகள் இணையத்தில் வைரலாகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படம் மயக்கம் என்ன. திசைமாறும் கணவரை பக்க பலமாக இருந்து சாதிக்க வைப்பார் நாயகி. ஆணோ, பெண்ணோ கணவன் மனைவிக்குள் சமரசமில்லாத ஆதரவு தேவை என்பதை அப்படம் சொல்லும். அப்படியான நிஜ கதைகள் சமூகத்தில் பல நடந்துள்ளன.

தொழிலதிபரும் ஃபிளாட் ஹெட்ஷூஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான திரு கணேஷ் பாலகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை பற்றி,  ட்விட்டர் வாசி ஒருவர் தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் கணேஷ் பாலகிருஷ்ணன் பற்றியும், அவர் எவ்வாறு தன் மனைவி வேலைக்குச் சென்று அவருக்கு பக்க பலமாக இருந்தார் என்பதை பற்றி பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் பாலகிருஷ்ணன் மட்டுமல்ல இவரை தவிர மேலும் இரண்டு வெற்றிகரமான தொழிலதிபர்களும் தங்களது மனைவியிடம் இருந்து பொருளாதார ரீதியான உதவிகளை பெற்று தான் வாழ்வில் ஒரு நல்ல நிலையில் எட்டியுள்ளனர்.

உதாரணத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் திரு. நாராயண மூர்த்தி அவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தை துவங்கும் போது, தன்னுடைய மனைவியின் பணத்தில் முதலீடு செய்து தான் ஆரம்ப காலத்தில் இந்த நிறுவனத்தை தொடங்கினார்கள். அவரின் மனைவி திருமதி. சுதாமூர்த்தி அவர்கள் தான் பத்தாயிரம் ரூபாயை தனது கணவருக்கு கடனாக கொடுத்து, இன்போசிஸ் நிறுவனத்தின் முதன்முதலில் முதலீடு செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு உதாரணமாக ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆன பாவிஷ் அகர்வாலுக்கு அவருடைய மனைவி ராஜலக்ஷ்மி அகர்வால் பொருளாதார ரீதியாக பல வழிகளில் உதவி செய்துள்ளார். ஓலா நிறுவனம் தனது ஆரம்ப காலகட்டங்களில் இருந்த போது தன்னுடைய மனைவியின் காரை கடன் வாங்கி தான் பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்ததாகவும், தன்னுடைய ட்விட்டர் பதிவில் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

Also Read : விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை தொந்தரவு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்…! ஐ.டி நிறுவனம் அதிரடி

இவர்களைத் தவிர மற்றும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்களும் ஆரம்ப காலகட்டங்களில் தங்களது மனைவியின் உதவியை கொண்டுதான் வாழ்வில் வெற்றி பெற்றுள்ளனர். உங்களது வாழ்க்கைத் துணையை பொறுத்து தான் உங்களது வேலை மற்றும் தொழில் சிறப்பாக அமையும் என்றும் அப்பெண்மணி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான நிலவி வரும் சமூக சிந்தனைகளை உடைத்து மிகவும் முற்போக்கான சிந்தனையுடன் உள்ள அந்த பெண்மணிக்கு பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த பதிவிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Businessman, Success, Trending