• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடும் இளம் வயதினர் சைபர் அச்சுறுத்தலில் ஈடுபடலாம்: ஆய்வில் தகவல்!

சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடும் இளம் வயதினர் சைபர் அச்சுறுத்தலில் ஈடுபடலாம்: ஆய்வில் தகவல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சமூக ஊடக தளங்களில் அதிக நேரம் செலவிடும் இளம் வயதினர், இணைய அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு ஒன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக நேரம் செலவிடும் இளம் வயதினர், இணைய அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு ஒன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது. சைல்ட் அண்ட் அடோலசண்ட் கவுன்சிலிங் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சமூக ஊடகத்திற்கு அடிமையாதல், ஆன்லைனில் அதிக நேரம் செலவழித்தல், மற்றும் ஆண்களாக அடையாளம் காணப்படுவது போன்றவை இளம் பருவத்தினரில் சைபர் மிரட்டல் குற்றங்களை செய்ய தூண்டுவதாக கணித்துள்ளது.

இது குறித்து ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான அமண்டா ஜியோர்டானோ கூறுகையில், “பெயர் தெரியாத காரணத்தினாலும், யாரும் பதிலடி கொடுப்பதில்லை என்பதாலும் ஆன்லைனில் இணைய அச்சுறுத்தலில் ஈடுபடும் சில டீன்ஏஜ் வயதினர் உள்ளனர். அறிவாற்றல் வளர்ச்சியில் அதிக திறமைகளை வெளிப்படுத்தும் பல இளம் பருவத்தினர் நம் வீட்டில் உள்ளனர். ஆனால் உலகளாவிய பார்வையாளர்களைக் கொண்ட தொழில்நுட்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குகிறோம். பின்னர் அவர்கள் நல்ல தேர்வுகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்று ஜியோர்டானோ தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் சரியான கவனிப்பு இல்லாததால் பிள்ளைகள் தவறான பாதையில் செல்வதற்கு பெற்றோர்களே காரணமாகின்றனர். சைபர் மிரட்டல் பல வடிவங்களில் உள்ளன. அவை தனிப்பட்ட தாக்குதல்கள், துன்புறுத்தல் அல்லது பாரபட்சமான நடத்தை, அவதூறு தகவல்களை பரப்புதல், ஆன்லைனில் ஒருவரை தவறாக சித்தரித்தல், தனிப்பட்ட தகவல்களை பரப்புதல், சமூக விலக்கு மற்றும் சைபர்ஸ்டாக்கிங் உள்ளிட்டவை ஆகும்.

ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 13 முதல் 19 வயது வரையிலான இளம் பருவத்தினரை ஆய்வு செய்தனர். கணக்கெடுக்கப்பட்ட 428 பேரில், 214 பேர் அதாவது 50 சதவீதத்தினர் பெண்கள் , 210 பேர் அதாவது 49.1 சதவீதத்தினர் ஆண்கள் , நான்கு பேர் 0.9 சதவீதத்தினர் திருநங்கைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இளம் பருவத்தினர் ஆன்லைனில் இருக்கும் போது, அவர்கள் தங்கள் சகாக்களுடன் நேரில் பேசுவதை விட விட வித்தியாசமான சமூக விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றி கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Also read... சாப்பிடுவதற்காக ஸ்லேட் பென்சிலை விற்பனை செய்யும் அமேசான்... இப்படியெல்லாமா விப்பாங்க!

ஆன்லைனில் ஒருவரின் உண்மை விவரங்களை குறிப்பிட வேண்டியதில்லை என்பதாலும் மற்றும் பதிலடி கொடுப்பதைத் தவிர்ப்பதற்கான திறன் ஆகியவற்றின் காரணமாக இளம் வயதினர் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்ரோஷமானவர்களாகவும் அல்லது விமர்சன ரீதியாக தாக்குவதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக, சைபர் புல்லிங் செயலில் ஈடுபடும் போது அவர்கள் குறைவான வருத்தத்தையும் பச்சாதாபத்தையும் உணரக்கூடும். ஏனெனில் அவர்கள் செய்யும் செயல்களுக்கு எந்தஒரு நேரடி தாக்கத்தை அவர்களால் பார்க்க முடியாது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஏழு மணிநேரங்களுக்கு மேல் ஆன்லைனில் செலவழித்ததாக அறிவித்தனர். மேலும் சிலர் ஒரு நாளில் ஆன்லைனில் செலவழித்த சராசரி அதிகபட்ச நேரங்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாகும். ஆய்வில், இளம்பருவ ஆண்களே பெண்களை விட சைபர் மிரட்டலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆக்கிரமிப்பு நடத்தைகள் அதிக ஆண் உந்துதல் கொண்டவை என்பதைக் காட்டும் கடந்த கால ஆய்வுகளுடன் இவை ஒத்துப்போகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: