மீனுக்கு சவப்பெட்டி... உடலைத் தகனம் செய்து அஞ்சலி செலுத்திய அமெரிக்க மாணவர்கள்!

மீனுக்கு சவப்பெட்டி... உடலைத் தகனம் செய்து அஞ்சலி செலுத்திய அமெரிக்க மாணவர்கள்!
மீனுக்கு சவப்பெட்டி
  • Share this:
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் லூம்பா என்ற மீனுக்கு இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்து வீடியோவாக பதிவிட்ட செயல் பலரது இதயங்களையும் வென்றுள்ளது.

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் லூம்பா என்ற மீனுக்கு இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்தனர். இதற்காக பேனா பெட்டியிலிருந்து தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியின் உள்ளே மீனுக்கு அலங்காரம் செய்து உள்ளே வைத்து மாணவர்கள் சிலர் அதனை தூக்கி வந்துள்ளனர்.

பின்னர் மீனின் உடலை தகனம் செய்து மாணவர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ரிப் செலுத்திய படி மீனும் ஒரு உயிர் என பதிவிட்டு வருகின்றனர். சிலர் என்னிடம் கொடுத்தால் பொறித்திருப்பேன் என்றபடியும் கமெண்ட் செய்து வர்கின்றனர்.


  Also see:
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading