ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

குறும்புக்கார பென்குயின் குட்டி - எடை எடுக்க விடாமல் படுத்தும் பாடு... இணையத்தை நெகிழவைத்த காட்சி!

குறும்புக்கார பென்குயின் குட்டி - எடை எடுக்க விடாமல் படுத்தும் பாடு... இணையத்தை நெகிழவைத்த காட்சி!

பென்குயின் குட்டி

பென்குயின் குட்டி

அழகான வெள்ளை பென்குயின் குட்டியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பராமரிப்பாளர் ஒருவர் குறும்புக்கார  பென்குயின் குட்டியை எடை கணிக்க முயன்றபோது  சிரமப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  வழக்கமாக நாம் பார்த்த வெள்ளை கருப்பு பென்குயின் இல்லாமல் இந்த பென்குயின் உடல் முழுவதும் வெள்ளை ரோமத்துடன் அழகாகவுள்ளது. அந்த வீடியோவில் பென்குயினின் பராமரிப்பாளர் அதனின் எடையை எடுக்கக் குட்டியை எடை தராசில் வைக்கிறார்.

  ஆனால் பென்குயின் குட்டி தராசில் நிற்காமல் ஓடி ஓடிச் செல்கிறது. அதனை ஒரு வழியாக  எடை தராசில் வைத்து எடை எடுக்கிறார். இதில் பலரின் மனதைக் கவர்ந்தது அந்த பென்குயினின் அழகிய சத்தமும் அதன் குறும்புத் தனமும் தான். வைரலாகும் இந்த வீடியோவை அட்வன்சர் உலக அமைப்பு வெளியிட்டுள்ளது.

  இந்த வகை பென்குயின்களை, பென்குயினின் ராஜா என்று அழைக்கின்றனர். இவை பனி பிரதேசங்களில் மட்டும் தான் இருக்கும். அந்த பென்குயினின் வயது வெறும் 97 நாள் தான் என்று கூறப்பட்டுள்ளது. 97 நாட்களில் இது 14.1 கிலோ எடையை கொண்டுள்ளது.

  Also Read : டீ தயாரிப்பதில் உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண் - 1 மணி நேரத்தில் எவ்வளவு கப் தயார் செய்துள்ளார் பாருங்க?

  ராஜா பென்குயின் என்ற இந்த இனம் அண்டார்டிக் பனிப் பிரதேசங்கள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழ்கின்றன. இவை சுமார் 45  இன்ச் உயரம் வரை வளரும். மேலும் பென்குயின் வகைகளில் அதிக எடை மற்றும் உயரம் வளரக்கூடியவை இந்த ராஜா பென்குயின் வகை தான். நன்கு வளர்ந்த பென்குயின் 22 செ.மீ உயரம் மற்றும் 30 கிலோ வரை எடை இருக்கும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Animals, Viral Video