Home /News /trend /

செய்தி வாசிக்கும் போதே பக்கவாதம்.. நேரலையில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

செய்தி வாசிக்கும் போதே பக்கவாதம்.. நேரலையில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

செய்தி வாசிக்கும் போதே பக்கவாதம்

செய்தி வாசிக்கும் போதே பக்கவாதம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஜுலி சின் என்பவர் செய்தி வாசிக்கும் போதே பக்கவாத அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India
  இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்ற அயராது உழைக்கும் நாம் உடல் நலத்தை ஒரு போதும் முறையாக கவனித்துக் கொள்வதில்லை. அதிலும் செய்தித்துறைகளில் பணியாற்றும் நபர்கள் சொல்லவே தேவையில்லை. வாரத்திற்கு 7 நாள்கள் என 24 மணி நேரமும் பிஸியாக இருப்பதோடு டென்சனாக இருக்கும் நிலை தான் செய்தியாளர்களின் வாழ்க்கை.

  இவர்கள் வேலை வேலை என்று சொல்லிக்கொண்டு உடல்நலத்தைக் கவனிப்பதில்லை. இப்படி தன்னுடைய உடல் நலத்தை ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்ளாததன் விளைவு தான் அமெரிக்காவில் நேரலையில் செய்தி வாசித்தபெண் ஒருவர் ஆரம்ப கால பக்கவாத அறிகுறியால் பாதிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள 2 நியூஸ் ஒக்லஹோமாவின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவருகிறார் ஜுலி சின். நேரலையில் நேர்த்தியாக செய்திகளை வழங்குவதில் நல்ல திறன் கொண்டவர். வழக்கம் போல கடந்த வாரம் செய்தி வாசிக்கும் போது திடீரென அவரால் செய்தியை வாசிக்க முடியவில்லை. தொடர்ந்து பதட்டம் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டு பக்கவாத ஆரம்ப அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  இதனையடுத்துஉடனடியாக நேரலைக்கு ப்ரேக் விட்டு மற்றவர் தொடர்ந்திருக்கிறார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவரை சிகிச்சை செய்த மருத்துவர் இவருக்கு ஆரம்ப கால பக்கவாத அறிகுறி ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது. இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி இருந்தாலும் தான் எப்படி இந்த பாதிப்பு ஏற்பட்டது? என்பது மர்மமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும் தன்னுடைய அனுபவம் குறித்த பகிர்ந்துள்ள செய்தி வாசிப்பாளர் ஜுலி சின், வழக்கம் போல செய்தி வாசிக்கும் போது தனக்கு முன்னால் இருந்த பிராம்டரைப் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வார்த்தைகள் உலற ஆரம்பித்து உடல் சோர்வு அடைந்த நிலையில் தான் உடனடியாக செய்தியை மற்றவர்களுக்கு மாற்றி விட்டேன் என்கிறார்.

  இது போன்ற நிலைக்கு வருவதற்கு முன்னதாக முதலில், ஒரு கண்ணின் பார்வையை இழந்தேன். சிறிது நேரத்தில் என் கையும் மரத்துப் போனது. பின்னர், டெலிப்ராம்ப்டரில் எனக்கு முன்னால் இருக்கும் வார்த்தைகளை என் வாய் பேசாதபோது நான் பெரிய சிக்கலில் இருப்பதை அறிந்தேன். உடனே செய்தி வாசிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சைக்கு சென்று விட்டேன் என்றார்.

  பின்னர் மருத்துவனைக்குச் சென்ற போது தான், தனக்கு பக்கவாதத்தின் ஆரம்ப கால அறிகுறி இருந்தது என்றும் முழு பக்கவாதம் இல்லை. தற்போது உடல் நலத்துடன் உள்ளேன் எனவும் தனது முகநூல் வாயிலாகத் தெரிவித்துள்ளார். மேலும் இதுப்போன்ற பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியாது என்றும் ஆரம்ப கட்டத்திலே அறிந்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறார் பாதிக்கப்பட்ட பெண் செய்தி வாசிப்பாளர்.

  Read more: எலிசபெத் மகாராணிக்கு பிறகு கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் யாருக்கு போகும்

  குறிப்பாக ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வைக்குறைபாடு, கைகால்களில் உணர்வின்மை, தெளிவற்ற பேச்சு, சோர்வு, மோசமான இயக்கம் போன்றவை பக்கவாத நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே இதுப்போன்ற பாதிப்பு உங்களுக்கு அல்லது உங்களது நண்பர்கள் என யாருக்கும் இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கின்றனர். பொதுவாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதாலோ, ரத்த நாளங்கள் சிதைவடைவதாலோ பக்கவாதம் ஏற்படலாம். குறிப்பாக ஆண்களை விட பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Srilekha A
  First published:

  Tags: Trends, Viral

  அடுத்த செய்தி