• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Viral Video : இது வெற லெவல்..! பூம் பூம் மாட்டுக்காரரின் வீடியோவை வெளியிட்ட ஆனந்த் மஹிந்திரா!

Viral Video : இது வெற லெவல்..! பூம் பூம் மாட்டுக்காரரின் வீடியோவை வெளியிட்ட ஆனந்த் மஹிந்திரா!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்தொடர்பவர்களை மகிழ்விக்கவும், மீம்ஸ்கள், வீடியோக்கள், வேடிக்கையான உண்மைகள் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

 • Share this:
  நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய சமுதாயத்தில் மக்கள் பலருக்கு பொழுதுபோக்கு விஷயமாக இருப்பது சோசியல் மீடியா தான். இன்ஸ்டா, ட்விட்டர், ஸ்டோரீஸ், ஷாட் வீடியோ என பல வேடிக்கையான, பிரமிக்க வைக்கும் நிகழ்வுகளை மக்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்வதும், அதனை உலக அளவில் ட்ரண்ட் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அதன்படி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் வீடியோக்கள் பல நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. அதிலும், திருமணங்களில் நடக்கும் சில கலாட்டாக்கள், விலங்குகள் செய்யும் சில குறும்பு வீடியோக்கள் என அன்றாடம் பல விஷயங்கள் இணையத்தில் வலம்வருகின்றன.

  மேலும், சில சுவாரசியமான விஷயங்களை மக்களுக்கு பகிர்வதில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மிகவும் ஆர்வமாக இருப்பார் என்பதை அவரது பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். பல இயற்கை சார்ந்த விஷயங்களை பகிர்வது மட்டுமல்லாமல், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்தொடர்பவர்களை மகிழ்விக்கவும், மீம்ஸ்கள், வீடியோக்கள், வேடிக்கையான உண்மைகள் மற்றும் பலரை எதிரொலிக்கும் எளிய வணிக ஞானம் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி இந்த வாரம், நாட்டின் பல்வேறு தரப்பு மக்களிடையே டிஜிட்டல் பேமெண்ட் எவ்வாறு பிரபலமாகியுள்ளது என்பதற்கு ஒரு தனித்துவமான உதாரணத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

  தற்போதைய காலகட்டத்தில் நாட்டின் பெரிய நகரங்களில் வசிக்கும் பலர் தங்கள் பணப்பையில் பணத்தை வைத்திருப்பதை விரும்புவதில்லை. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணத்தை தங்களது பர்சில் எடுத்துச்செல்லும் காலம் எப்போது போய்விட்டது. ஏனெனில் பெரு நகரங்களில் எங்கு சென்றாலும் "UPI Payment" என்ற டிஜிட்டல் பரிவர்த்தனையை நாம் மேற்கொள்ளலாம். இதற்கு ஒருவர் தங்கள் போனில் அதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து அதில் வங்கி விவரங்களை இணைக்க வேண்டும்.

  பெரு நகரங்களில் மட்டுமல்ல சிறிய நகரங்களிலும் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. டீ கடை மற்றும் பானிபூரி கடையில் தொடங்கி பெரிய வணிக வளாகங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில், UPI அட்டை தலையில் கட்டப்பட்டிருந்த ஒரு காளையுடன் தெருக் கலைஞர் ஒருவர் நடைபாதையில் செல்வோரிடம் பணத்தை பெற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்றை ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார்.


  அந்த வீடியோவில் வண்ணமயமான புடவைகள் அணிந்த காளையுடன் ஒரு கலைஞர் இசைக் கருவியை வாசித்துக்கொண்டு நிற்கிறார். மேலும் அந்த காளையின் கொம்புகளிலும் குளம்புகளிலும் பூக்கள் கட்டப்பட்டு நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, மாட்டின் தலையில் UPI ஸ்கேனிங் குறியீடு அட்டை கட்டப்பட்டிருந்தது. அந்த கலைஞர் இசைக்கருவியை வாசிக்கும்போது, மற்றொரு நபர் பணம் செலுத்த விலங்கின் தலையில் உள்ள குறியீட்டை ஸ்கேன் செய்வதைக் வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நிரூபிக்க இன்னும் ஆதாரம் வேண்டுமா?!" என்று கேப்ஷன் செய்திருந்தார்.

  இந்த சடங்கு தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடத்தும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமான கங்கிரெட்டுலு என்றழைக்கப்படும் சடங்குகள் ஆகும். இந்த நிகழ்வை தமிழகத்தில் பூம் பூம் மாட்டுக்காரன் என்று அழைப்பர். இந்த சடங்கின் போது, ஆண்கள் அலங்கரிக்கப்பட்ட எருதுகளுடன் குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக செல்வது வழக்கம். பதிலுக்கு, மக்கள் பணம் அல்லது பிச்சை வடிவில் நன்கொடைகளை வழங்குவர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: