கடந்த சில நாட்களாக, நேபாளத்தில் நடந்த விமான விபத்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல முறை நேபாளத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், இது வரை இல்லாத அளவுக்கு 60க்கும் மேற்பட்ட பயணிகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தான விமானத்தில் உதவி விமானியாக இருந்த அஞ்சு கடிவாடா என்ற பெண்மணியும் இறந்துள்ளார். ஆனால், இவரது கணவரும் விமானி என்பது, இவரது கணவரும் இதே போல நேபாள விமான விபத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சுவின் கணவன் நேபாளத்தில் இருக்கும் ஒரு சிறிய விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி இருக்கிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவன் இறந்த பின்பு, அஞ்சு மனம் உடைந்து போகாமல் தன்னுடைய கணவனின் பணியை தொடர்ந்து செய்வதாக உறுதி ஏற்று அதற்குரிய பயிற்சிகளையும் மேற்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சு தன்னுடைய பெற்றோர்களின் உதவியுடன், விமானியாக, அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டார். ஆனால் இதற்கு இவருடைய குடும்பத்தார் எளிதாக சம்மதம் தெரிவிக்க இல்லை.
குடும்பத்தினர் அஞ்சுவின் முடிவை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் தன்னுடைய மறைந்த கணவர் போல விமானியாக வேண்டும் என்று முடிவில் இருந்து மாறாமல் இருந்த அஞ்சு, அமெரிக்காவில் விமானியாக பயிற்சி பெற்ற பின்பு, நேபாளத்தில் இருக்கும் yeti ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தில் 2010 ஆம் ஆண்டு விமான துறையில் தன்னுடைய கேரியரை தொடங்கினார்.
பல ஆயிரக்கணக்கான மணிநேரங்கள் விமானங்களை ஓட்டிய பின்பு, ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதுவரை 6000க்கும் மேற்பட்ட மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் அஞ்சுவுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த கோர விபத்தில், துணை விமானியாக இயங்கிய அஞ்சுவும் இறந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்று yeti ஏர்லைன்ஸ் சார்பாக கூறப்பட்டது. அஞ்சுவின் உடல் இதுவரை கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அவர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்த விபத்தில் 68 பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடைபெற்ற மிகவும் கோரமான விமான விபத்து என்றும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.