ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

குலோப் ஜாமூனை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு - சட்டென்று பயணி எடுத்த முடிவுக்கு குவியும் லைக்ஸ்

குலோப் ஜாமூனை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு - சட்டென்று பயணி எடுத்த முடிவுக்கு குவியும் லைக்ஸ்

குலோப் ஜாமூன்

குலோப் ஜாமூன்

Gulab Jamuns | சில சமயம், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் சில வகை உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீங்கள் விமானப் பயணம் செய்த அனுபவம் கொண்டவர் என்றால், நிச்சயமாக நீங்களும் இந்த சிக்கலை கடந்து வந்திருப்பீர்கள். அதாவது, விமானத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் லக்கேஜ் எடுத்துச் சென்று, சிலவற்றை விமான நிலையத்திலேயே விட்டுவிட வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள்.

குறிப்பாக, வெளிநாடுகளுக்கு செல்லும்போது அல்லது அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது, நமக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை பேக்கிங் செய்து எடுத்து வருவது நம்மிடையே உள்ள பழக்கம் தான். அதே சமயம், லக்கேஜ் அதிகம் என்று அதிகாரிகள் சொல்லும் பட்சத்தில் நாம் முதலில் கைவிட முன்வருவது இந்த உணவுப் பொருட்களை தான்.

ஏனென்றால், அவை தான் அதிக எடையை அடைத்துக் கொண்டிருக்கும். மேலும், ஆடைகள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற பிற பொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்தவையாக இருக்கும். சில சமயம், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் சில வகை உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும்.

தாய்லாந்தில் நிகழ்ந்த ருசிகர சம்பவம்

தாய்லாந்து நாட்டின் பூகேட் விமான நிலையத்திற்கு, அண்மையில் பயணம் செய்ய வந்திருந்த ஹிமான்சு தேவகனுக்கும் இத்தகைய அனுபவம் நேரிட்டது. ஒரு சிறிய டின் நிறைய இவர் குலோப் ஜாமூன்களை எடுத்து வந்திருந்தார். அவரது உடமைகளை பரிசோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள், இந்த குலோப் ஜாமூனை உடன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

சமயோஜித நடவடிக்கை

குலோப் ஜாமூன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ஹிமான்சு தேவகனுக்கு அதை தூக்கி எறிய மனம் வரவில்லை. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு அதிகாரிக்கும் அவற்றை சாப்பிடக் கொடுத்தார்.

Also Read : 9 ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் மேப்பின் அதே இடத்தில் அதே பெண் - டெக்னாலஜிக்கும் தேஜா வூ.!

இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் குலோப் ஜாமூன் கொண்டு செல்லக் கூடாது என்று அவர்கள் அனுமதி மறுத்த நிலையிலும், அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நாங்கள் குலோப் ஜாமூனை வழங்கினோம்’’ என்று தெரிவித்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Himanshu Devgan (@himanshudevgan)கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. அனுமதி மறுக்கப்பட்டதும் உணவுப் பொருளை வீண் செய்யாமல் அவற்றை விமான நிலையப் பணியாளர்களுக்கு வழங்கிய பயணியின் நல்லெண்ணமும், அதை ஏற்றுக் கொண்ட பணியாளர்களின் பக்குவமும் பாராட்டுக்குரியவை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Also Read : படத்தில் முதலில் தெரிவது எது.? உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.!

அதிகாரிகளுக்கு இந்தப் பயணி இனிப்பான தண்டனை கொடுத்திருக்கிறார் என்று பயணி ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

அதிகாரிகளுடன் சண்டை போடாமல் இந்தப் பயணி அன்பு மற்றும் கருணையை காண்பித்துள்ளார் என்று மற்றொரு பயனாளர் பாராட்டியுள்ளார். மற்றொரு பயணி பதிவு செய்துள்ள கமெண்டில், முன்னொரு முறை லண்டன் விமான நிலையத்தில் தங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Gulab jamun, Thailand, Trending, Viral Video